Author: Admin

பொருளாதாரச் சரிவின் அபாய அறிகுறிகள் இந்திய நாடு இன்று எதிர்கொண்டுள்ள பொருளாதாரச் சரிவும் அதன் விளைவாக இந்நாட்டு மக்கள் எதிர்கொண்டுவரும் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களும் இந்நாட்டின் பொருளாதார எதிர்காலம் தொடர்பான ஆழமான கவலைகளை உருவாக்கியுள்ளது. “இந்தியா ஒரு மெளன நிதிச் சிக்கலை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது” என்று பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைப் பேரவையின் உறுப்பினர் ரத்தின் ராய் கூறியதும், நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதையும் குறிப்பிட்டு ஒரு மாதத்திற்கு முன்னரே எனது முகநூலில் பதிவிட்டிருந்தேன். ஆனால் இந்திய ஒன்றிய அரசின் நிதியமைச்சரோ அல்லது பிரதமரோ அப்படி ஒரு நிலையை இந்நாடு எதிர்கொண்டிருப்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் வாகன உற்பத்தி உள்ளிட்ட சில துறைகளில் மந்த நிலை இருப்பதை மட்டும் ஒப்புக்கொண்டு, அதற்கு தற்காலிமான நிவாரணங்களை அளிப்பதற்கான ஆலோசனையில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் இந்நாடு…

Read More

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவர்களின் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்- இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெற்றது தொடர்பாக பல்கலைக்கழக வளாகத்திற்குள் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றை சுதந்திரப் பேச்சாளர்கள் ஆய்வு வட்டம் (Freedom Speech- Study Circle) என்ற பெயரிலான மாணவர் குழு ஏற்பாடு செய்திருந்தது. இக்குழுவில் உள்ள மாணவர்கள் மீது பல்கலைக்கழகம் நிரந்தர நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்குறிப்பிட்ட பேச்சாளர்கள் ஆய்வு வட்டமானது கடந்த காலங்களில் தொடர்ந்து பல ஆக்கப்பூர்வமான விவாதங்களை பல்கலைக்கழத்திற்குள் அமைதியான மற்றும் ஜனநாயக வழியில் நடத்தி வந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பாஜக அரசு ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கியிருந்த சிறப்பு அந்தஸ்தை ( 370 & 35A) ரத்து செய்தது. அரசியலைப்பு சட்டப்பிரிவு 370 குறித்து…

Read More

சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் ‘வந்தே மாதரம்‘ பாடலா? முடிவைக் கைவிடாவிட்டால் வழக்குத் தொடுக்கப்படும்! – திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் புறந்தள்ளிவிட்டு, இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வரிகளைக் கொண்ட வந்தே மாதரம் பாடலைப் பாடுவது – சட்ட விரோதமானது – கண்டனத்துக்கு உரியது என்றும், இந்த நிலையை மாற்றி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாட முடிவு செய்யாவிட்டால், நீதிமன்றத்தின் வழியாக முடிவு காணப்படும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு: சென்னையில் உள்ள ஐஐடி(Indian Institute of Technology) என்ற நிகர்நிலைக் கல்வி நிறுவனம் போன்ற ஒரு தனி அமைப்பு, ஜெர்மன் நாட்டு உதவி, மத்திய அரசு, மாநில அரசுகளின் நிதி உதவியாலும் பல்வேறு அனுமதிகளுடன் நடந்துவரும் நிறுவனம்! பெரியார் – அம்பேத்கர் வாசகர் வட்டத்தைத் தடுத்தவர்கள் நடைமுறையில் அது ஒரு…

Read More

சமூகரீதியாக இன்னும் பின்தங்கியுள்ள சாதிகளைக் கண்டறிந்து இட ஒதுக்கீடு பலன்கள் அவர்களைச் சென்றுசேர்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்கான இட ஒதுக்கீடை அதிகரிக்க வேண்டும், உள் ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும். கலைஞர் அருந்ததியருக்கு 3% உள் ஒதுக்கீடு கொடுத்தது அத்தகையதுதான்.

Read More

அண்மையில் வெளியிடப்பட்ட SBI வங்கியின் ஜுனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கான முதல் நிலைத்தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில வாரியாக வெளியிடப்பட்டிருக்கும் இத்தேர்வு முடிவில், முதன்மை தேர்வுகளுக்கு தேர்ச்சி பெற்ற போட்டியாளர்களின் குறைந்தபட்ச மதிப்பெண்கள்(Cut-off marks) இடஒதுக்கீடு அடிப்படையில் வெளியிடப்பட்டிருந்தன. பல்வேறு மாநிலங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி பிரிவுக்கான(EWS) கட்-ஆஃப் மதிப்பெண், சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருக்கும் OBC, SC மற்றும் ST பிரிவினரை விட மிகவும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. உதாரணமாக, தமிழகத்தில் SC பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 61.25 ஆகவும், ST பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 53.75 ஆகவும், OBC மற்றும் பொது பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 61.25 ஆகவும் இருக்கும் நிலையில், உயர்சாதி EWS பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் வெறும் 28.5 ஆக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது கடுமையான கண்டனத்திற்குரியது. இதே போன்ற நிலை அஸ்ஸாம்,மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நிலவுகின்றது. கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட BHEL…

Read More

திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிராக ஆற்றிய உரை முக்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக திராவிட முன்னேற்ற கழகத்தின் முழுமையான எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு ஏன் துடிக்கிறது. இதன் மூலம் இந்த நாட்டிற்கு என்ன சொல்ல நினைக்கிறது மத்திய அரசு. இதன் மூலம் நாட்டு மக்களை பிரிக்கும் முயற்சியில் இறங்குகிறது மத்திய அரசு. பெண்களுக்கு பயன் தரக் கூடிய 33 சதவிகிதம் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் நீங்கள் பொடுபோக்காக உள்ளீர்கள். ஆனால் முத்தலாக் தடை மசோதாவை கொண்டு வருவதில் நீங்கள் காட்டும் ஆர்வம் வியப்பளிக்கிறது. காரணம் கேட்டால் “முத்தலாக் தடை மசோதா பெண்களின் நலனுக்காக” என்கிறீர்கள். பெண்களுக்கான நலன் எது என்பது பெண்களாகிய எங்களுக்கு உங்களை விட நன்றாக தெரியும். ஒன்றும் உதவாத முத்தலாக் தடை மசோதாவை விட்டுவிட்டு பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டைத்தை…

Read More

கட்டுரையாளர் – – ‘ப்ரியன்’ காஜா மதிய நேரத்தின் உச்சி வெயிலில் ATM – அறையை நோக்கி பணமெடுக்க விரையும் போது நெடுநாள் பழகிய ஒருவரைக் கடந்து செல்வதாய் ஒரு பிரக்ஞை. வேகத்தைக் குறைத்து பின்னோக்கி திரும்பினால் நரைப்பதற்கு இதற்குமேல் தலையில் முடி இல்லாமல், தளர்ந்து போய் ஒரு காவலாளி. ஆமாம் பஷீர் தாத்தா. பத்தாண்டுகளுக்கு முன்பு ஊர் கிராமத்தில் பண்ணையார் போன்று வலம் வந்தவர். இன்று வறுமைக்கான சாட்சி முகத்தையும், வற்றிய வயிற்றுடன் இங்கே. அறிமுகப்படுத்திக்கொண்டு விசாரித்ததில் நகர விரிவாக்கம் என அரசிடம் பறிகொடுத்த நிலத்தைப்பற்றியும், தோட்டத்தைச் சுற்றி சுற்றி வந்த பறவைகளைப் பற்றியும் விசனப்பட்டுக் கொண்டதை இப்போதும் மறக்க முடியாது.இதில் மேலும் வேதனை என்னவென்றால் இன்னும் லட்சக்கணக்கான பஷீர் தாத்தாக்களை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் காத்திருக்கிறது இந்த பாசிச பாஜக அரசு. எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் ஒடுக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட மண்ணின் மைந்தர்களான காடுகளில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்றச்…

Read More

பாஜக ஆட்சியும் அரசியலமைப்பு சாசனமும் இந்தியா சுதந்தரமடைந்து இத்தனை வருடங்களில் இதுவரை பேசப்படாத அளவிற்கு ஜனநாயகம் பற்றியும் அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பது பற்றியும் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது.  ஜனநாயகம் என்பது சாதி, மத, வர்க்க பேதமின்றி  அனைத்து தரப்பு மக்களும் சமமான உரிமைகளையும், பங்களிப்பையும், அதிகாரப் பகிர்வையும் பெற வழிவகுக்கிறது. இந்த ஜனநாயகத்தை உறுதி செய்யும் பொறுப்பை அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாஜக ஆட்சியை நாம் மீளாய்வு செய்து பார்க்கும்போது இந்தியாவில் எவ்வாறு ஜனநாயகம் சிதைந்து கொண்டிருக்கிறது என்பதையும், அரசியல் சாசனம் எப்படி நீர்த்து போகச் செய்யப்பட்டுள்ளது என்பதையும் நம்மால் உணர முடியும். இந்த துறை, அந்த துறை என்றல்லாமல் சகட்டுமேனிக்கு எல்லாத்துறைகளிலும் தனது ஆக்டோபஸ் கரங்களை அகல விரித்து வைத்திருக்கும் பாசிச ஆட்சியால் தெருவில் திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் கணக்கற்ற பொத்தல்கள் கொண்ட ஆடையைப் போல இந்தியா நான்கு வருடங்களில் கிழிக்கப்பட்டுள்ளது.…

Read More

22 மார்ச் 2004 வருடம் மிகச்சரியாக இதே நாள், அதிகாலை ஃபஜர் தொழுகைக்காக சென்று கொண்டிருந்த கண்பார்வை மங்கிய , நடக்க இயலாத உடலின் பல பகுதிகள் செயலிழந்து போன 67 வயதான ஒரு முதியவரை கொலை செய்வதற்கு உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ராணுவ விமானமான F-16 அணி அணியாக அந்த வீதியில் சரமாரியாக குண்டுகளை வீசியது. திட்டமிட்ட அந்தத் தாக்குதலை “சற்றும் எதிர்பாராததொரு விபத்துதான் இது. நாங்கள் அவரைக் குறிவைத்து ராக்கெட்டை ஏவவில்லை” என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் பொய்தான் சொல்கிறார் என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும். வயதில் மிகவும் முதிர்ந்த, மார்க்கக் கல்வியில் கரை கண்டவரான அவர் பெயர் ஷேக் அகமது யாசின். இருபது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஹமாஸின் தலைவர். ஹமாஸை வழி நடத்தியவர்கள் எல்லோரும் அரசியல் வல்லுநர்களாக மட்டும்…

Read More