Author: Admin

கொரோனா வைரஸ் பெயரைச் சொல்லி முஸ்லிம்கள் குறி வைக்கப்படுகிறார்கள் – தி கார்டியன் (ஏப்ரல் 13 ம் நாளன்று தி கார்டியன் இதழ் ‘Conspiracy theories targeting Muslims spread in India’ என்ற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. Hannah Ellis Peterson, Shaik Azizur Rahman என்ற பத்திரிக்கையாளர்கள் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது) வட மேற்கு தில்லியின் விளிம்பில் இருக்கும் ஹரேவாலி (Harewali) என்ற கிராமத்தைச் சார்ந்த மெகபூப் அலி என்ற 22 வயது இளைஞனை வெளியில் இழுத்து கம்பாலும்,செருப்பாலும் ஒரு கும்பல் மூக்கிலும், காதுகளிலிலும் இரத்தம் வரும்வரை அடித்தது. சில வாரங்களுக்கு முன்னதாக போபாலில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாடு ஒன்றில் அந்த இளைஞன் கலந்து கொண்டதுதான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று காவல்துறை சொல்கிறது. நாடு முழுவதும் கொரோனா வைரசை இந்துக்களுக்கு பரப்பும் ‘சதியைச்’ செய்ததாகச் சொல்லி, வேறு யாரெல்லாம் இந்தச் ‘சதியின்’ பின்னால்…

Read More

திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரங்கு உத்தரவால் டெல்லி, உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் பரிதவித்து நிற்கின்றனர் லட்சக்கணக்கான தொழிலாளர்கள். வேலையில்லை; வருமானம் இல்லை; ஊருக்கு செல்லலாம் என்றால் ரயில், பஸ்.. எதுவும் இல்லை. வேறு வழியின்றி, பல நூறு கிலோமீட்டருக்கு அப்பால், வெவ்வேறு மாநிலங்களில் இருக்கும் தங்கள் சொந்த ஊர்களுக்கு கால்நடையாகவே கிளம்பிவிட்டனர். அதுவும் தனியாக அல்ல, குழந்தைகளை தூக்கிக்கொண்டு, பைகளை சுமந்துகொண்டு செல்கின்றனர். டெல்லி, நொய்டா, ஃபரிதாபாத், காஸியாபாத் ஆகிய இடங்களில் இருந்து இப்படி மக்கள் கூட்டம், கூட்டமாக கிளம்பிச் செல்லும் வீடியோக்களும், புகைப்படங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. எங்கோ 150 கி.மீ., 200 கி.மீட்டருக்கு அப்பால் இருக்கும் ஊரை நோக்கி தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கின்றனர். உறக்கமில்லை; உணவில்லை. கை குழந்தையை தூக்கிக்கொண்டு எவ்வளவு நேரம் நடக்க முடியும்? ஆறு, ஏழு வயதான சிறுவர்களை தூக்கவும் முடியாது. அவர்கள் எவ்வளவு தூரம் நடப்பார்கள்? இவர்களின் துயரம் கேள்விப்பட்டு, சில இடங்களில் சாலையோரங்களில்…

Read More

என் நண்பர்களிடம கூறுங்கள், அவர்கள் என்னை பார்க்கும்பொழுது, என் பிணத்தை பார்க்கும்பொழுது எனக்காக அழுது துக்கம் கொள்ளும்பொழுது “நீங்கள் காணும் இந்த பிணம் நான் தான் என்று எண்ணி விடாதீர்கள் இறைவனின் பெயரால், நிச்சயம் நான் கூறுகிறேன், அது நான் அல்ல நானோ ஒரு ஆன்மா, இதுவோ வெறும் சதை மட்டுமே அது எனக்கு குறுகிய காலத்திற்கு ஒரு தங்கும் இடமாகவும் ஆடையாகவும் இருந்தது நான் ஒரு பொக்கிஷம், தாயத்துக்குள் மறைத்து வைக்க பட்டிருந்தேன் மண்ணால் படைக்க பட்டது அது, எனக்கு ஒரு சன்னதி ஆக இருந்தது நானோ ஒரு முத்து, அதன் சிப்பியையோ விட்டுவிட்டது நானோ ஒரு பறவை, இந்த உடலோ எனது கூண்டாக இருந்தது இப்பொழுது நான் பறந்து செல்கிறேன், அதை ஓரடயாளம் ஆக விட்டுவிட்டு எல்லா புகழும் இறைவனுக்கே, அவனே இன்று என்னை விடுதலை செய்தான் அவனோ எனக்காக வானங்களில் என்னுடைய ஒரு உயர்ந்த இடத்தை தயார்…

Read More

வட இந்திய, இந்துத்வ வன்முறையைக் காட்சிப்படுத்தி வந்திருக்கும் ஜிப்சிக்கு நன்றி. நாடோடி ஒருவனின் கதையாக வந்திருக்கவேண்டிய இந்தப்படம், இஸ்லாமியர் வாழ்வியல் மீது துணிந்து தவறான சித்திரத்தைத் தருவதோடு, இந்துப் பெரும்பான்மைவாதத்துக்குத் துணைபோகிறது. இஸ்லாமியர்களின் வாழ்வியலைப் படமெடுக்கும் முன், அது பற்றிய குறைந்தபட்ச ஆய்வைச் செய்யவேண்டும். அப்படி எதுவுமில்லாமல், இப்படம் இஸ்லாமியர்களின் வாழ்வியல் முறையை மிகவும் கொச்சையாக முன்வைக்கிறது. பிதாமகன் படத்தில் வெட்டியானாக வரும் நாயகனை எங்கிருந்தோ வந்த பெண் பிரசவித்துப்போவாள். அதுபோல இப்படத்தில், “சிவாயநம” சொல்லும் இந்து அப்பாவுக்கும், “தொழுகையைக் கைவிடாத” இஸ்லாமியப் பெண்ணுக்கும் கஷ்மீரில் பிறக்கிறான் நாயகன் ஜிப்சி. குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்து, ஜிப்சி ஒருவரால் ஜிப்சியாக வளர்க்கப்படுகிறான். குண்டு வெடிப்பை இஸ்லாமியர்கள் நடத்தியாகப் பின்பாதியில் நாயகன் சொல்கிறார். அதாவது “சிவாயநம” சொல்லும் இந்து, தன் இஸ்லாமிய மனைவியின் சமய உரிமைகளில் தலையிடவில்லை. கஷ்மீரிகளின் குண்டை, இஸ்லாமியர்களின் குண்டாகப் பொதுப்புத்திக்கு ஏற்றவகையில் நாயகன் சொல்வதாகப் படம் சொல்கிறது. தாய்தந்தையரைப் பறிகொடுத்த,…

Read More

புதுதில்லி: ஒருவாரம் கழித்து ரூபினா தனது இல்லத்திற்கு முதல் முறையாக திரும்புகிறார்.பிப்ரவரி 25 அன்று தில்லி ஷிவ் விகாரில்தனது இல்லத்தை அடித்து நொறுக்க வந்த மதவெறி கும்பலிடமிருந்து தனது ஐந்து குழந்தைகளோடு தப்பித்து ஓடிய 33 வயது பெண்மணி ரூபினா. ஒரு வாரம் கழித்து மார்ச் 2 அன்று, ஷிவ் விகாரின் 14ஆவது தெருவில் அமைந்துள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு வருகிறார். வழிநெடுகிலும் அந்த வீதி சுடுகாடு போல காட்சியளிக்கிறது. கட்டடத்தின் கீழ் தளத்தில் அந்த வீட்டுக்கு சொந்தக்காரரான முஸ்லிம் பெரியவர் வைத்திருந்த கடை அடித்துநொறுக்கப்பட்டு கிடக்கிறது. தானியங்கள், துணிமணிகள், கண்ணாடிகள், வாட்டர்கூலர்கள் என ஒவ்வொன்றும் அந்த சந்து முழுவதும் சிதறி, நொறுக்கப்பட்டு அந்த கட்டடமேஇடிந்து விழுந்தது போல காட்சியளிக்கிறது. மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டிற்குள் நுழைகிறார் ரூபினா. உள்ளே கண்ட காட்சியைப் பார்த்து கதறி அழுகிறார். வீடே அலங்கோலமாக்கப்பட்டுள்ளது. துணிகள் எரிக்கப்பட்டுள்ளன. எல்சிடி டிவி…

Read More

இந்த மௌனம் கொல்கிறது நண்பர்களே! உங்கள் மௌனம் என்னைக் கொல்கிறது நண்பர்களே! உண்மைதான்! உங்கள் மௌனம் எனது கொலைக்கு ஒப்பானதாய் நான் கருதுகிறேன் நண்பர்களே! முகநூலில், ஐந்தாயிரம் நண்பர்கள். இதில் பின்பற்றாளர்கள் இன்னும் சில ஆயிரம். அப்படியிருந்தும் இன்று நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அராஜகம் குறித்து நீங்கள் மௌனமாக இருப்பது என்னை பெருத்த கேள்விகளால் துளைத்தெடுக்கிறது என்பதே உண்மை. எனது பதிவுகளுக்கு நீங்கள் தெரிவிக்கும் விருப்புகள், வெறுப்புகள், அழகிய முறையில் விவாதிக்கும் பின்னூட்டங்கள், எனது ஒளிப்படங்களுக்கான உங்களது புகழுரைகள், விமர்சனங்கள் இவை எல்லாம் போலியானவை என்று உங்கள் மௌனத்தின் பொருளாய் நான் எடுத்து கொள்ளலாமா? இன்னும் ஓரிரு மாதங்களில் பாட்டன், பூட்டன் என்று காலங்காலமாய் வாழ்ந்து வந்த ஒரு சமூகத்தின் அங்கத்தினரான எனது குடியுரிமை சம்பந்தமாக வளர்ந்து நிற்கும் கேள்விக்குறியும், அனுதினமும் நாட்டில் நடக்கும் பதட்டங்களுமாய் கழியும் பொழுதுகள் ஒருவேளை நீங்கள் உள்வாங்காமலிருக்கலாம். ஆனால், நானும் என்னைச் சார்ந்தோரும் இந்த நாட்டின்…

Read More

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் என்பது மட்டுமே அவர் அடையாளம் அன்று. கதீஜாவை அறிந்தவர்கள் எல்லோரும் அறிவர், ஏ.ஆர்.ரஹ்மானைப் போலவே அவரும் எவ்வளவு முக்கியமானதோர் ஆளுமை என்று. கதீஜாவை எனக்கு ஒன்பது ஆண்டுகளாகத் தெரியும். இன்று ‘கருணாமிர்தசாகரம்’, தமிழ் இசை இணையத்தளத்திற்காகச் சேர்ந்து பணியாற்றத்தொடங்கியிருக்கிறோம். யார் யார் கைகளிலேயோ இந்தப் பணியை ஒப்படைத்தும் அது முன் நகரத்தொடங்காமல் கடைசியாக, ஏ.ஆர்.ரஹ்மான், கதீஜாவிடம் ஒப்படைத்த பின்பு தான் இந்தப்பணி வேகமும் உறுதியும் கொண்டது. அந்த அளவிற்கு தனித்த ஆற்றல் கொண்டவர், கதீஜா ரஹ்மான். ‘சிறகு’, திரைப்படப்பணி தொடங்கிய நாள் முதல் எங்களுடன் இருக்கிறார். தொடர்ந்து மிகுந்த அக்கறையுடன் படப்பணிகள் குறித்து விசாரிப்பார், அலுவலகத்திற்கு வருவார், தயாரிப்பாளருடன் உரையாடி நலம் விசாரிப்பார். என்னிடம் மட்டுமன்று, அவர் தொடர்பில் இருக்கும் யாரைக் கேட்டாலும் அவரவர்க்குத் தனித்த சிறப்பான அனுபவங்கள் இருக்கும். அந்த அளவிற்கு இளம் வயதிலேயே முதிர்ந்த பண்பும் நடத்தையும் ஆளுமையும் கொண்டவர். கதீஜா ஒரு கொடை.…

Read More

ஒரே வருடத்தில் இந்த விவகாரம் மீண்டும் சுற்றி வருகிறது. நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் அனைவரும் ஒரு பெண் என்ன ஆடையை அணிய விரும்புகிறாள் என்பதில் கவனம் செலுத்துகின்றனர். வாவ், எனக்கு மிகவும் திகைப்பாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்த விவகாரம் தலையெடுக்கும்போதும் என்னுள் எரியும் தீ பல்வேறு விஷயங்களைச் சொல்வதற்கு என்னைத் தூண்டுகிறது. பல ஆண்டுகளாகப் பார்க்காத என்னுடைய பல்வேறு குணாதிசயங்களைக் கடந்த ஒரு வருடமாக நான் கண்டுகொண்டேன். என்னுடைய வாழ்வின் நான் எடுத்த முடிவுகளை எண்ணி பலவீனமடையவோ வருத்தப்படவோ மாட்டேன். என்ன செய்துகொண்டிருப்பதை எண்ணி மகிழ்வாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொள்பவர்களுக்கு நன்றி கூறுகிறேன். கடவுளுடைய விருப்பத்தால் என்னுடைய பணிகள் மட்டுமே பேசும். மேற்கொண்டு நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. இதற்கு ஏன் நான் விளக்கமளிக்கிறேன் என்று உங்களில் யாரேனும் நினைத்தால், இங்கே ஒருவர் தனக்காகப் பேசியாக…

Read More

‘போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது’ என்ற கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தேன் அது இன்னொரு கொடுங்கனவின் விழிப்பு ‘ இஸ்லாமிய அடிப்படைவாதம் அதிகரித்துவிட்டது’ என்ற குரலும் கூடவே கேட்டது தேச பக்தர்கள் தங்கள் துருப்பிடித்த ஆணிகளால் சிலேட்டில் எழுதுகிறார்கள் பல் கூசுகிறது எல்லாவற்றையும் தாண்டி வேறொரு குரலும் கேட்டது கருப்பு இரவில் குண்டாந்தடிகள் தலையில் இறங்குகையில் கேட்கும் கூக்குரல் அதையும் மீறி எதிர்ப்பின் இன்னொரு குரல் உரத்துக் கேட்கிறது ‘ அடிபணிவதென்றால் அது அல்லா ஒருவனுக்கே’ அந்தக் குரல் அளவற்ற தன்னம்பிக்கையைத் தருகிறது அது தெருத்தெருவாக பரவுகிறது பிறகு நகரம் நகரமாக பிறகு ஊர் ஊராக காற்றில் ஒரு நெருப்பைபோல இருளில் ஒரு வெளிச்சம் போல சாலைகளில் வாகனங்கள் நிற்கின்றன முடிவற்ற வரிசையில் நீள்கின்றன ‘கலைந்து செல்லுங்கள்’ என காக்கிக்குரல்கள் லவுட் ஸ்பீக்கரில் உத்தரவிடுகின்றன ‘ எங்கே செல்ல வேண்டும் தடுப்பு முகாம்களுக்கா?’ என்று கேட்கிறாள் முகத்திரை அணிந்த ஒருத்தி ‘ பாகிஸ்தானுக்குப் போக…

Read More

முஸ்லிம்கள் சட்டத்தை மதிப்பவர்கள், அதற்குக் கட்டுப்பட்டவர்கள். பின்னர் ஏன் CAA வுக்கு எதிராக போராடுகிறார்கள்?CAA எனப் பொதுவாகச் சொல்வதைவிட CAA2019 எனத் தெளிவாகச் சொல்வோம். ஏனெனில், நாட்டில் மொத்தம் 5 CAA க்கள் இதுவரை வந்துள்ளன. அதில், 2019 ல் இயற்றப்பட்ட தற்போதைய CAA வுக்கு எதிராக மட்டுமே போராடுகிறார்கள். மற்றவைகளுக்கு எதிராக அல்ல. தற்போதைய CAA 2019, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிராக உள்ளது; மனிதாபிமானம், சர்வதேச மனித உரிமை சட்டங்கள் முதலானவற்றுக்கும் எதிராக உள்ளது. இந்தியாவுக்கு உலக அரங்கில் ஒரு கவுரவம் உள்ளது. அது, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழனின் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் மனிதாபிமானமிக்க நாடு. இந்தக் கவுரவத்தை இழக்க வைக்கும் விதமாகவும் CAA2019 உள்ளது. எனவேதான் முஸ்லிம்கள் இதற்கு எதிராகப் போராடுகிறார்கள். தம் உயிர், உடைமை, அடையாளம் என எவற்றையும் நாட்டுக்காகவும் நாட்டு ஒற்றுமைக்காகவும் தியாகம் செய்வதற்குத் தயங்காதவர்கள் முஸ்லிம்கள். சுதந்திர வரலாற்றிலிருந்து…

Read More