Author: Admin

திங்கட்கிழமை 4.1.21 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வி. “மூன்று சட்டங்களின் ஒவ்வொரு பிரிவையும் எடுத்துக்கொண்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்” என்று கேட்டிருக்கிறது மோடி அரசு. “சட்டங்களைத் திரும்பப் பெறுவதைத் தவிர வேறு எதையும் நாங்கள் பேசத்தயாரில்லை” என்று பதிலளித்து விட்டனர் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள். “கானூன் வாப்ஸி நஹி தோ, கர் வாப்ஸி நஹி” சட்டத்தை திரும்ப் பெறவில்லை என்றால் வீடு திரும்புவதும் இல்லை என்று மோடி அரசின் முகத்தில் அடித்திருக்கிறார்கள் விவசாயிகள். ஒவ்வொரு 16 மணி நேரமும் திக்ரி – சிங்கு எல்லையில் ஒரு விவசாயி இறந்து கொண்டிருக்கிறார். இதுவரை 60 பேர் இறந்திருக்கின்றனர். குளிர், மழை… எனினும் அவர்கள் பணிய மறுத்து எதிர்த்து நிற்கிறார்கள். 6 ஆம் தேதி டிராக்டர் பேரணி. குடியரசு தினத்தன்று தில்லி நோக்கி டிராக்டர் பேரணி. 6 முதல் 26 வரை நாடு முழுவதும் விவசாயிகள் பேரணிகள் என்று போராட்டங்களை அறிவித்திருக்கின்றனர். இந்திய வரலாறு…

Read More

அமித் ஷாவின் `சாவர்க்கர் பாசம்’ அகிலம் அறிந்த ஒன்று. அவரது வீட்டில் நிரந்தரமாகவே ஒரு சாவர்க்கர் வரைபடம் உண்டு. எப்போதும், அதன் முன்னால் அமர்ந்தபடிதான், போட்டோவுக்கு போஸே கொடுப்பார் மனிதர். ஆக, விஷயம் தெளிவாகிறது. சாவர்க்கரை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கான வேலைகள், வேகமெடுத்துவிட்டன. ஏற்கெனவே, `ரூபாய் நோட்டில் சாவர்க்கர் படத்தைப் பொறிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வேறு நிறைய ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. அதுவும் இனி மேலெழுந்து வரக்கூடும். இதன் ஆபத்தை நாம் எந்தளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. ஏனென்றால், சாவர்க்கருக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பது, வெறுமனே அவருக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. அது, அவரது கோட்பாட்டுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமும்கூட. இந்த நேரத்தில், சாவர்க்கர் யார், அவரது அரசியல் எப்படிப்பட்டது, அவர் பாடுபட்டது யாருக்காக என்பதையெல்லாம், விரிவாகப் பேச வேண்டியது அதிஅவசியமாகிறது. இல்லையென்றால், நாளைக்கு ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் சாவர்க்கர் சிரிப்பதை, வரும் தலைமுறைப் பிள்ளைகள் பார்க்க நேரிடும். அமித் ஷா வேறு…

Read More

பாபர் மசூதி என்பது ஒரு வழிபாட்டுத்தலம் என்று இதுவரை நினைத்துக்கொண்டிருந்தீர்கள் இல்லை அது யாருடைய கையிலோ இருந்த மதுக்கிண்ணம் தற்செயலாக கைதவறி கீழேவிழுந்து உடைந்து விட்டது பாபர் மசூதி என்பது உறுதியான ஒரு பழங்கால கட்டிடம் என்று இதுவரை சொல்லப்பட்டது இல்லை அது யாரோ கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல் அது யார் கையிலோ உணர்ச்சிவசத்தால் மோதி சிதறி விட்டது இருபத்தெட்டு ஆண்டுகள் நீண்ட விசாரணைக்குப்பின் இந்த உண்மைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன வழங்கும் நீதிகளில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது ஒரு கட்டுக்கதையின் ஒவ்வொரு அத்தியாயமும் எந்தக்குழப்பமும் இல்லாமல் தெளிவாக எழுதப்படுகிறது எதுவும் திட்டமிடப்படவில்லை எல்லாமே தற்செயலாக நடக்கின்றன குழந்தைகள் கட்டிய மணல்வீடு ஒரு காற்றில் கலைவதுபோல பாபர் மசூதி கலைந்து விட்டது அந்த ஸ்தூபியின் மீது ஏறி நிற்பவர்கள் யார்? அது ஒரு க்ராஃபிக்ஸ் காட்சியாக இருக்கக்கூடும் கேமிராக்கள் முன் ’இதற்காக பெருமைப்படுகிறோம்’ என முழங்கியவர்கள் யார்? அது ஒரு திரைப்படக் காட்சியே…

Read More

அன்பு நிறைந்த நண்பர்களுக்கு, வணக்கம்! நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தொடக்க நாள் முதல், இன்று வரையிலும் நாம் இணைந்து பயணித்திருக்கிறோம். கடந்த நான்காண்டு காலத்துக்கும் மேலான கூட்டு உழைப்பின் காரணமாக, தமிழ்நாட்டின் தனித்துவம் மிகுந்த தொலைக்காட்சியாக, தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக, மக்கள் நலனை முன்னிறுத்தும் நம்பிக்கைக்குரிய ஊடக நிறுவனமாக இன்று பரிணமித்திருக்கிறோம். இதில் உங்கள் ஒவ்வொருவரின் அயராத உழைப்பும் பங்களிப்பும் போற்றுதலுக்குரியது. ஆழ்வார்ப்பேட்டையில் ஒரு சிறிய அறையிலும், ஹைதராபாதில் சில ஊழியர்களுமாக நாம் பணியாற்றிக் கொண்டிருந்த நாளில், என் மதிப்புக்குரிய நண்பர் வினவியது என் நினைவுக்கு வருகிறது. “தமிழகத்தில் ஏற்கெனவே இத்தனை தொலைக்காட்சிகள் இருக்கின்றனவே, இன்னொரு தொலைக்காட்சிக்குத் தேவையும் இடமும் இருக்கிறதா?” என்பதுதான் அவரது வினா. அக்கறையும் கவலையும் ஒருசேர அதில் வெளிப்பட்டன. அடுத்த சில வாரங்களிலேயே, ஒரு காணொளியைப் பகிர்ந்து பாராட்டுச் செய்தியும் அனுப்பி இருந்தார். ஜல்லிக்கட்டு போராட்டக் களத்தின் இறுதி நாளில், காவலர் ஒருவரே ஆட்டோவுக்கு…

Read More

இது News18 எனும் ஒரு சேனலோடு சுருக்கி பார்க்கவேண்டிய விசயமல்ல. 2014 முதலே இந்த நெருக்கடியை எல்லா ஊடகங்களும் சந்திக்கிறது. பாராளுமன்ற தேர்தலின்போது ஊடகங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதுபோல் தமிழக தேர்தலுக்கான நெருக்கடியை இப்போதே தருவதாக உணர்கிறேன். இது என்னோடு முடிந்துவிடும் பிரச்சினை அல்ல. எனக்கு பிறகும் சில முக்கியமானவர்களை ஊடகத்துறையில் இருந்து விரட்ட முழு முனைப்போடு செயல்படுகிறார்கள். எனக்கும் கறுப்பர் கூட்டத்திற்கும் தொடர்பு உள்ளது என கூறுபவர்கள் ஒரே ஒரு ஆதாரத்தை கொடுத்தால் நான் ஊடகத்தை விட்டும், சங்கத்தை விட்டும் சென்றுவிடுகிறேன் என சவால் விட்டும் இதுவரை ஒருவர்கூட அதற்கு ஆதாரம் தரவில்லை. என் பக்கம்தான் நியாயம் உள்ளது என பாஜகவை சார்ந்த அனைவருக்கும் தெரியும். நாராயணன், ராம சுப்ரமணியன் ஆகிய இருவர்களை தவிர வேறு யாரும் எனக்கு ஆதரவு தரவில்லை. எச்.ராஜாவிடம் நேரடியாக போனில் பேசியும் அவர் என்ன நோக்கத்தில் என்னை குறித்து ட்வீட் செய்தார் என தெரியவில்லை. சென்னை…

Read More

ஒரு சமூகம் எந்த அளவுக்கு வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைந்திருக்கின்றது என்பதைத் துல்லியமாகக் கணிப்பதற்கு அதன் எழுத்தறிவு, கல்வி தொடர்பான புள்ளிவிவரங்கள், அட்டவணைகள்தாம் அதிமுக்கியமான வழிவகைகளாய்க் கருதப்படுகின்றன. முன்னேறிய நாடுகளில் இப்போதெல்லாம் இன்னும் ஒரு படி மேலாக மற்றுமோர் அளவுகோலை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். இதனை “ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டிருத்தல் அட்டவணை’ Index of Life long learning என்றே அவர்கள் அழைக்கின்றார்கள். ஒரு பக்கம் அறிவு வெடிப்பும் மறுபக்கம் அறிவியலின் வியத்தகு வளர்ச்சியுமாக அறிவுக் களம் உச்சத்தை அடைந்து விட்ட நிலையில் இப்போது வெறுமனே உயர் கல்வி கற்றிருப்பது போதுமானதாகக் கருதப்படுவதில்லை. அதற்கும் மேலாக வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருந்தாக வேண்டிய அவசியம் உருவாகியிருக்கின்றது. இவ்வாறாக ஒருவர் என்னதான் தம்முடைய துறையில் ஆராய்ச்சிகள் பல செய்து முத்திரை பதித்திருந்தாலும், மிகப் பெரும் அளவில் அறிவியலை கரைத்துக் குடித்திருந்தாலும் தினம் தினம் புதுப் புது திறமைகளைக் கற்றுக் கொள்வதிலும்,…

Read More

ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பம்னு மெசேஜ் வந்த போது இவ்வளவு பிரச்சனைகள எதிர்கொள்ளுவோம்னு எதிர்பாக்கலை. முதல் சிக்கல் எங்களிடம் கணிணி, சொந்த உபயோக லாப்டாப் போன்ற விசயங்கள் இல்லை. செல்போன்கள் மட்டுமே. அதை வச்சு சமாளிக்கலாம்னு ஒரு கணக்கு போட்டோம். ஜியோ இருக்க பயமேன்னு அம்பானிய வேற நம்புனோம். டைம் டேபிள் பாத்ததும் தல சுத்திருச்சு. காலை எட்டு மணி முதல் மதியம் மூன்று வரை மாறி மாறி வகுப்புகள். நாங்கள் வேலைக்கு எப்படி போவது?திடீரென இருபதாயிரம் செலவு செய்து லாப்டாப் வாங்கணுமா? அதுவும் இருவருக்கெனில் என்ன செய்ய? எத்தனை நாட்கள் எனும் தெளிவும் இல்லை. இருந்தால் வாடகைக்கு வாங்கலாம்.இத்தனை செய்தாலும் பிள்ளைகளுக்கு கனெக்ட் பண்ண தெரியுமா? குறிப்பாக சின்னவளுக்கு. எட்டு வயதுதான். கூடவே இருப்பது சாத்தியாமா? இத்தனை எலக்ட்ரானிக் டிவைசுகளை சார்ஜர்களுடன் குழந்தைகளை நம்பி விட்டுவிட்டு எப்படி தைரியமாக வேலைக்கு செல்வது. இதெல்லாம் முதல்கட்ட சிக்கலாக இருந்தது. மிகுந்த குழப்பநிலை சரி…

Read More

தொலைக்காட்சியில் கணினிவழிக் கல்வி குறித்த என் தங்கையின் சிறு நேர்காணலைப் பகிர்ந்திருந்தேன். இணையம்வழி சரியான முறையில் கற்பவர்களுக்குப் பல பலன்கள் உள்ளன என்பதை நானும் மறுக்கமுடியாது. ஆனால் சமூகரீதியாக அதிலுள்ள சிக்கல்களையும் நாம் அறியவேண்டியுள்ளது. இந்த இரண்டு மாதங்கள் ஏட்டுக்கல்வி கற்றலில் இணையம்வழி கற்பதற்கான வசதி வாய்த்த குழந்தைகளுக்கும், அதற்கான வாய்ப்புகளற்ற குழந்தைகளுக்குமிடையே மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஆண்டுகளில் ஐஐடி, நீட், குடிமைப்பணித் தேர்வுகளின் போது இந்த இடைவெளியின் தாக்கம் தெரியவரும். என் தங்கையின் நிறுவனம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி முகாம்களின்போது கணினிவழிப் பயிற்சி அளிப்பதற்காக அரசாங்கத்தால் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் இவ்வாண்டு அந்த முகாம்களும் நடைபெறவில்லை. இணையத்தின்மூலம் அதை நடத்துவதற்கான சாத்தியங்களும் இதுவரை இல்லை. [ஜூன் 15ல் தொடங்கப்படலாம்]. இணைய இணைப்பும், திறன்பேசியும், தொலைக்காட்சியும் இல்லையென்று கேரளாவில் தற்கொலை செய்துகொண்ட மாணவி தேவிகாவை நினைத்துக்கொள்கிறேன். இத்தகைய கையறுநிலை எத்தனை குழந்தைகளின் மனநிலையாக இருக்கிறது என்பதை நாம் ஆராயவேண்டும்.…

Read More

“தமிழர்கள் எந்நாளும் ஒற்றை மத அடையாளத்தில் தம்மை முடக்கிக் கொண்டது இல்லை!” சீமானின் “நாம் தமிழர்” கட்சியைச் சேர்ந்த சதாம் உசேன் எனும் முஸ்லிம் இளைஞர் முருகக் கடவுள் புகழ் பாடி ஷரியத்திற்கு முரணாகத் திருமணம் செய்து கொண்டது குறித்து இப்போது ஒரு சர்ச்சை நிலவுகிறது. சீமானைக் கண்டிப்பவர்கள் ஒருபுறம். அப்படிக் கடுமையாகத் தம் சமூகத்தினர் அவரைக் கண்டித்ததற்காக அவரிடம் வருத்தம் தெரிவிக்கும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பினர் இன்னொரு புறம் என இரு போக்குகளைக் காண்கிறோம்.. இந்தப் பதிவு அது குறித்து அல்ல. நான் சீமானின் அரசியல் நகர்வுகளை எல்லாம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவனனும் அல்ல. இங்கு தினம் ஒரு வடிவில் வெளிப்படும் பாசிசத் தாக்குதல்களை எதிர் கொள்வதற்கே நமக்கு நேரம் போதவில்லை. இருந்த போதிலும் இந்த சர்ச்சையை ஒட்டி சீமானின் கடந்த இரண்டாண்டுகால அரசியல் நகர்வுகள் குறித்து மேலோட்டமாகச் சமூக ஊடகப் பதிவுகளில் தேடிப் பார்த்தேன். சீமானின் செயல்பாடுகள் ஒரு…

Read More

கடந்த 22.5.2020 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சந்தித்தது. அந்தச் சந்திப்புக்கான காரணத்தை அறிக்கையாகவும் அவர்கள் வெளியிட்டிருந்தார்கள். அந்த அறிக்கை வரிக்குவரி கடும் ஆட்சேபனைக்கு உரியதாக இருப்பதைப் பதிவு செய்யவே நாங்கள் இந்தக் கூட்டறிக்கையை விடுக்கிறோம். நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் வீரத் தமிழர் முன்னணி, தமிழம் மதம் போன்றவை குறித்து நம்மில் பலரிடம் அச்சம் இருந்து வந்த நிலையில், அந்தக் கட்சியைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் சிவன், முருகன் பெயர் கூறி திருமணம் நடத்தியது சாமன்ய முஸ்லிம்களிடையே பெரும் விவாதப் பொருளானது. இந்தப் பின்னணியில்தான் பல்வேறு இஸ்லாமிய அமைப்புப் பிரதிநிதிகள் ஒன்றுதிரண்டு சீமானை வீடு தேடிச் சென்று சந்தித்தனர். சந்தித்ததற்கு வலுவான காரணம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. எனினும் இச்சந்திப்பை ஒரு குற்றமாகவும் நாங்கள் பார்க்கவில்லை. அதேசமயம், சந்திப்புக்குப் பிறகு அந்தக் கூட்டமைப்பினர் வெளியிட்ட அறிக்கை தம் சொந்த சமூகத்தையே…

Read More