Author: Admin

அது எண்பதுகளின் மத்தியப்பகுதி… சர்வதேச பொது மன்னிப்பு இயக்கம் என்றழைக்கப்படும் அம்னஸ்டி இண்டர்நேஷனலில் (Amnesty International) தோழர்களோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டம். . உலகின் எங்கோ ஒரு மூலையில் சிறைப்பட்டிருக்கிற இரு கைதிகளின் விடுதலைக்காக ஒவ்வொரு குழுவும் பணியாற்ற வேண்டும். . சிறை வைக்கப்பட்டிருப்பவர் தனது நிறத்தின் பொருட்டோ… இனத்தின் பொருட்டோ… தான் வைத்திருந்த சித்தாந்தத்தின் பொருட்டோ… கைது செய்யப்பட்டவராக இருப்பார். அப்படிப்பட்டவர்களை மனசாட்சிக் கைதிகள் என்றழைப்பார்கள் (Prisoner of Conscience). நாம் அவர்களது விடுதலைக்காக உழைக்க வேண்டும். . ஆனால் அப்பணியின்போது நமது இனம், மதம், சித்தாந்தம் சார்ந்த கருத்துக்கள் ஒருபோதும் குறுக்கிடக் கூடாது. நாம் யாராயினும் மற்றொரு முனையில் கைது செய்யப்பட்டிருப்பவர் எதன் பொருட்டு சிறை வைக்கப்பட்டிருப்பினும் அவரது விடுதலையையே இலக்காகக் கொண்டு செயற்படவேண்டும். . கொஞ்சம் புரியும்படி சொல்வதானால்… நாம் நாத்திகராகவே இருப்பினும் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டிருப்பவர் கிருஸ்துவ மதப் பிரச்சாரகராகவோ அல்லது ஹரே ராமா…

Read More

கோவிட்-19ம் உச்ச நீதிமன்றமும் சாதாரண காலங்களில் அரசியல் அமைப்புச் சட்டம் முக்கியமானது என சவாசமாகப் பேசிக் கொள்ளலாம். ஆனால், நெருக்கடியான நேரங்களில், அரசியல் நிர்ணயச் சட்டம், அதனை செயல்படுத்திடும், வழிமுறைகள், அதனை செயல்படுத்திட வேண்டிய உச்ச நீதிமன்றத்தின் அக்கறை அனைத்தும் சோதிக்கப்படுகின்றன. இந்த சோதனைகளில் நமது உச்ச நீதிமன்றம் வெகுவாகவே தோற்றுப்போய்விட்டது. கோவிட்-19 காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் வீழ்ச்சி அவமானமானது. இந்த ஆய்வு, நமது உச்ச நீதிமன்றம் எப்படி ஓர் அவவேளையில் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தையும், மக்களையும் ஒட்டுமொத்தமாகக் காலை வாரிவிட்டது என்பதைப் பற்றியதே! உச்ச நீதிமன்றத்திற்கு வரும் சில வழக்குகள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கொண்டனவாக இருக்கக் கூடாது என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அதாவது நீதிபதிகள் முழு விஞ்ஞானிகளாகவோ, மருத்துவர்களாகவோ, இருக்க வேண்டாம் என யாரும் எதிர்பார்த்திட வேண்டாம். ஆனால், அவர்கள் – நீதிபதிகள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றியும் – அரசியல் சாசனத்தின் வழிகாட்டும் கொள்கைகளைப்…

Read More

நெடுந்துயர சித்திரவதை – நொறுங்கிப்போன மானுடம் உடம்பு முழுவதும் காயங்கள். கண்களில் படர்ந்திருக்கும் பயம். முகம் கொடுத்து பேச மறுக்கும் தவிப்பு. உணர்வு மறுத்துப்போய் அவமானத்தால் கூனிக்குருகியிக்கும் ராகுலை புரிந்து கொள்ள முடிந்தது. என்ன ராகுல் நடந்தது? பதிலுக்கு முன்பு கண்ணீர் தான் எட்டிப் பார்த்தது. பத்துக்கும் மேற்பட்ட வன்கொடுமை கும்பல் 21 வயது ராகுல் என்கிற இளைஞரை மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்க, அண்ணா என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சி அழுகின்ற காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். என்ன நடந்தது? சம்பந்தப்பட்ட இடத்திற்கு எவிடன்ஸ் குழுவினருடன் களஆய்வில் ஈடுபட்டேன். தஞ்சாவூர் – அம்மாபேட்டை அருகில் உள்ள கிராமம் பூண்டி. இக்கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ராகுல். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டார். அவரது அப்பாவி தனத்தை பயன்படுத்திக் கொண்டு…

Read More

ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை’ என்ற வாதம் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தொழிற்துறை வர்த்தகர்களால் வைக்கப்படும் என்று தெரிகிறது. தாங்கள் மீண்டுவிட்டோம் என்றும், நம்பிக்கையான திட்டங்கள் உள்ளன என்றும் அவர்கள் மூச்சு விட்டுக்கொள்ளலாம். ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஏனெனில், இந்த அரசு வழக்கம்போல் தொழிற் நிறுவனங்களுக்கான திட்டங்களை முன்மொழிந்துள்ளது, தனியார்மயமாதலில் தனது ஈடுபாட்டை வெளிப்படையாகக் கையாண்டுள்ளது. தொழிலாளர்கள் மறுசீரமைப்பு, கொரோனா பெருந்தொற்றுக்கான நிவாரணம் மற்றும் பல்வேறு அடிப்படைத் தேவைகள் இருக்கும்போது கார்ப்பரேட்களுக்கான உதவித்தொகை வழங்குவதிலேயே கவனமாக உள்ளது. பெருந்தொற்று பல மில்லியன் மக்களின் (பெரும்பாலும் ஏழைகள்) வாழ்வாதாரத்தைச் சிதைத்த பிறகு வழங்கும் முதல் பட்ஜெட் இது. அதில் ஏதும் தமக்கான ஆச்சரியம் இருக்குமா என்று அவர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். அவை, அவர்களின் பெரும் பாதிப்புக்கான நிவாரணமாகவும், மற்ற அனைத்து நாடுகளிலும் செய்ததைப் போல் அவசரக்கால உதவித்தொகையாகவும், பேரிடர் காலத்தால் பாதிக்கப்பட்ட அவர்களின் கல்வியைப் பலப்படுத்தும் விதமாகவும், சிறு குறு தொழில்களின் சீரமைப்பாகவும் அல்லது கடந்த ஒரு…

Read More

தி.இராசகோபாலன் என்கிற ஓய்வுப் பெற்ற பேராசிரியர் ‘மனமாற்றமே வேண்டும்’ என்கிற தலைப்பில் மத மாற்றத்துக்கு எதிராக கட்டுரை என்கிற பெயரில் சாதிய ஆணவத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். மீனாட்சிபுரத்தில் இஸ்லாமுக்கு மதம் மாறிய தலித்துகள் பல தார மணத்துக்காகவே மதம் மாறினர் என்கிறார் இராசகோபாலன். இந்த சமூக ஆய்வை ஐயா அவர்கள் எந்த புண்ணிய ஷேத்திரத்தில் உட்கார்ந்துக் கொண்டு ஞான திருஷ்டி கொண்டு தெரிந்துக் கொண்டாரோ? ரோஸா பார்க்ஸ் வரலாறு தெரிந்தவர்களுக்குக் கூட தெரியாதது நம்மூர் மீனாட்சிபுரத்தில் 80-கள் வரைக் கூட தலித்துகள் பேருந்துகளில் சீட்டில் அமர்ந்து செல்ல முடியாத நிலை இருந்தது. இதில் உச்சப் பட்ச கொடுமை என்னவென்றால் ரோஸா பார்க்ஸ் கறுப்பு இனத்தவர், பார்த்தாலே வெள்ளைக்காரர்களுக்கு அவர் நம்மவர் இல்லை என்று தெரியும். ஆனால் மீனாட்சிபுரத்தில் அடக்குபவனுக்கும் அடக்கப்படுகின்றவருக்கும் வித்தியாசத்தை ஸ்தூலமாக எப்படி கண்டு உணர்ந்தார்கள்? இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் நோபல் பரிசு கொடுக்கப்பட்டால் நம்மவர்கள் அள்ளி விடுவார்கள். இன்னும்…

Read More

January22 #GrahamStaines #BajrangDal #BurntAlive மறதி என்பது மனிதனின் இயல்பு என்பதால், ஒவ்வொரு ஜனவரி 22ஆம் தேதியும், அதே தேதியில் 21 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வு குறித்து ஏதாவது ஒரு பதிவையாவது எழுதி, அதனை மக்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறேன். 1965 ஆம் ஆண்டு, தன்னுடைய 24 வது வயதில் ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரிசாவின் மனோகர்பூர் என்கிற பழங்குடி கிராமத்திற்கு வந்தார் கிரகாம் ஸ்டெயின்ஸ். அங்கிருக்கும் தொழுநோய் மருத்துவமனையை கவனித்துக்கொண்டு, அங்கேயே தங்கிவிட்டார். காதலித்து மணமுடித்து மனைவியுடனும் இரண்டு மகன்களுடனும் ஒரு மகளுடனும் அந்த பழங்குடி கிராமத்திலேயே மக்களுக்காக வாழ்ந்து வந்தார் கிரகாம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அந்த கிராமத்திற்கு பயணித்து, அங்கேயே தங்கி தொழுநோய்க்கான சிகிச்சை பெற்று ஆண்டுதோறும் ஏராளமானோர் பயனடைந்துவந்தனர். 1999இல் ஃபாதர் கிரகாமும் அவரது இரு மகன்களும் ஒரு காருக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் போது, அங்கே 50 பேருக்கும் மேற்பட்டோரைக் கொண்டு ஒரு கும்பல்…

Read More

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் . பாலஸ்தீனம் ! மனித குலம் படைக்கப்பட்ட காலத்திலிருந்தே, உலக வரலாறு ஒரு தனிப்பட்ட நாட்டைப் பற்றியும் தனிப்பட்ட இனத்தைப் பற்றியும் தனிப்பட்ட ஒரு நகரைப் பற்றியும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறது என்றால் அவை பாலஸ்தீனம், பாலஸ்தீனர்கள் , ஜெருசலம் ஆகியவைகளைப் பற்றியதாகும். இந்த மூன்று காரணிகளையும் ஒதுக்கிவிட்டு உலகசரித்திரத்தின் எந்த காலக்கட்டத்தையும் எவராலும் எழுத இயலாது. எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள் மட்டுமல்லாமல் இறைவேதங்களிலும் குறிப்பிடப்படும் சிறப்புக்கள் பெற்றவைதான் நாம் குறிப்பிடும் இந்த நிலமும் இனமும் நன்நகரும். இந்த அடிப்படையில் இவை பற்றி பல்வேறு நூல்களைப் படித்து இருக்கிறோம். உலகப் படத்தைப் பார்த்தால் , அந்தக்கால 501 நிறுவனத்தின் நீண்ட பார் சோப் அளவுக்கு மட்டுமே தென்படுகிற இந்த நிலப் பகுதி, உலக அரசியலின் ஒவ்வொரு நகர்விலும் தனது தாக்கத்தை செலுத்தி இருக்கிறது. யூத , கிருத்தவ, இஸ்லாமிய மார்க்கங்களில் இறைவனின் தூதர்கள் என்று…

Read More

The Royal Islamic Strategic Studies அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய 500 முஸ்லிம் ஆளுமைகளை வரிசைப்படுத்தி வெளியிடுவது வழக்கம். இந்த பட்டியலில் கடந்த 2020 ஆண்டின் சிறந்த முஸ்லிம் பெண்மணியாக 82 வயதான பல்கீஸ் பானு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நன்கு கவனியுங்கள் வயது 82.! நீதி வேண்டி ஆதிக்க சக்திகளை எதிர்த்து நடைப்பெறும் போராட்ட களங்களே வரலாறு முழுவதும் புதிய தலைவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் நடைப்பெற்ற CAA எதிர்ப்பு போராட்டங்களுக்கு வழிக்காட்டியாக அமைந்த டெல்லி ஷாஹின்பாக் போராட்டக்களம் கண்டெடுத்த முதன்மை போராளி தான் பில்கீஸ் பாட்டி என்று அழைக்கப்படும் பில்கீஸ் பானு. உத்தரபிரதேசத்தின் ஹபூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். தமது இளமையையும் முதுமையின் பெரும்காலத்தையும் சாமானிய மக்களில் ஒருவராகவே கழித்தார். 2019-ம் ஆண்டு நடைப்பெற்ற பொதுத்தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியை தக்கவைத்த பாஜக, தமது தாயகமான RSS-ன் முஸ்லிம் விரோத கனவுத்திட்டங்களை ஒவ்வொன்றாக…

Read More

ஒருவர் கனமான சிமிண்ட் கல்லால் பின்னந்தலையில் பலமாக தாக்குகிறார். தாக்கப்பட்ட அந்த இளைஞர் நிலைகுலைந்து கீழே விழுகிறார். முடிவெட்டுகிற அம்பட்ட நாய் நீ, எங்க பொண்ணு உனக்கு கேக்குதா என்று கூறிக்கொண்டே 12 பேர் கொண்ட கும்பல் அந்த இளைஞரை செருப்புக் காலால் எட்டி உதைக்கின்றனர். நெஞ்சில் ஏறி மிதிக்கின்றனர். வயிற்றில் கற்களால் அடித்து காயப்படுத்துகின்றனர். தரதரவென்று இழுத்துச் சென்று மார்பில் கத்தியால் குத்துகின்றனர். வயிற்றிலும் கத்தி குத்து. அந்த இளைஞர் பரிதாபமாக ரத்தம் கசிந்து இறந்து போகிறார். இந்த சம்பவம் பிற்பகல் 1.30 மணியளவில் நடக்கின்றது. கொல்லப்பட்ட இடம் கரூர், கல்யாண பசுபதி ஈஸ்வரன் கோவில் எதிரில். கோவிலுக்கும் காவல்நிலையத்திற்கும் இடையில் உயிர்போகும் நிலையில் துடிதுடித்து கிடந்தார் 23 வயது ஹரிஹரன். கல்யாண பசுபதி ஈஸ்வரன் கோவிலை கருமாதி தளமாக மாற்றியிருக்கின்றனர் சாதி வெறி பிடித்த கும்பல். ஹரிஹரன் ஏன் கொல்லப்பட வேண்டும்? எவிடன்ஸ் குழுவினர் களஆய்வில் ஈடுபட்டனர். கரூர்,…

Read More

மலையாளப் புனைவிலக்கிய உலகின் தனிப் பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைகம் முகம்மது பஷீர் எழுதிய மனதை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சரித்திரமே “மதில்கள்”. பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக தமிழாக்கம் செய்துள்ளார் சுகுமாரன். பஷீரின் தனி அடையாளம் தன்னுடைய வாழ்க்கையையே இலக்கியத்துக்கான மூலப் பொருளாகவும் படைப்பாகவும் கருதி செயல் பட்டார் என்பது தான். தனக்கு சொந்தமல்லாத ஓர் அனுபவத்தையோ ஒரு வரியையோ அவர் எழுதவில்லை. இலக்கியத்தின் இந்த எளிய அடிப்படை தான் பஷீரை இவ்வளவு காலத்துக்குப் பின்னர் வாசக அங்கீகாரமுள்ள எழுத்தாளராக நிலை நிறுத்தி இருக்கிறது எனலாம். “நானே பூங்காவனமும் பூவும்” என்று மதில்கள் நாவலின் மையப்பாத்திரத்தின் கூற்றாக ஒரு வாக்கியம் இடம் பெறுகிறது. பஷீரின் படைப்புலகின் அடித்தளம் இது தான். தனிமைச் சிறையில் தவிக்கும் பஷீருக்கு நாரயணியின் குரல் கொடுக்கும் நெருக்கம் சிறை வாழ்க்கையில் ஆறுதல் தருகின்றது. அவளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவிருக்கும்…

Read More