Author: Admin

யஹ்யா எனும் நான்; நாடுகடத்தலை தற்காலிகத் தாயகமாகவும் கனவை நித்தியப் போராக மாற்றிக் கொண்ட ஒரு அகதியின் மகன். தெருக்களில் கழிந்த குழந்தைப் பருவம், நீண்ட காலச் சிறைவாசம், நித்தமும் இம்மண்ணில் சிந்தப்பட்ட ஒவ்வொரு ரத்தத் துளிகளென என் வாழ்வில் நான் கழித்த ஒவ்வொரு நொடியும் என் கண்களுக்கு முன்பாக ஒளிர்ந்து கொண்டிருக்க இவ்வார்த்தைகளை எழுதுகிறேன். நான் 1962இல் கான் யூனிஸ் முகாமில் பிறந்தேன். ‘ஃபலஸ்தீனம்’ என்பது ஒரு கந்தலான நினைவாகவும் அரசியல்வாதிகளின் மேசைகளில் உள்ள சில வரைபடங்களில் இருந்து மறைந்தும் இருந்த காலம் அது. எனது வாழ்க்கை நெருப்புக்கும், சாம்பலுக்கும் இடையில் கழித்தன. ஆக்கிரமிப்பாளர்களின் நிழலில் வாழ்வது நிரந்தரச் சிறையில் வாழ்வததற்குச் சமம் என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தேன்! இந்த மண்ணில் வாழ்வது சாதாரணமான ஒன்றல்ல என்பதை நான் எனது சிறு வயதிலிருந்தே புரிந்திருந்தேன். இங்கு பிறந்த எவரும் சுதந்திரத்திற்கான பாதை மிக நீண்டது என்பதைப் புரிந்தவர்களாயும், யாராலும் வெல்ல முடியாத…

Read More

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2022-24 கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு முடிவுகள் வெளிவந்து மூன்று மாதங்களாகியும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Certificate) வழங்கப்படாமல் உள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள TNPSC மற்றும் பிற அரசுத் தேர்வுகளை எழுத தகுதிப்பெற்று இருந்தும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாததால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சான்றிதழ்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள இந்த தாமதம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அலட்சியத்தை வெளிக்காட்டுகிறது. எனவே மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 2022-24ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை விரைந்து வழங்க SIO கோரிக்கை விடுக்கிறது.

Read More

அற உணர்வுகள், ஒழுக்க உணர்வுகள் என்பது மனிதனிடம் இயற்கையாக அமைந்துள்ள இயல்புகள். மனித உள்ளம் தன்னியல்பாகவே நன்மைகளை விரும்புகிறது. அதுபோல, தீமைகளை வெறுக்கிறது. உதாரணத்திற்கு, நீதி, அன்பு, சமத்துவம், வாய்மை, நேர்மை போன்ற அம்சங்களை மனிதன் எப்போதும் நல்லவை என்று அங்கீகரித்து வந்திருக்கிறான். அதுபோல, பொய், ஏமாற்று, கொலை, அநியாயம் முதலானவற்றை தீயவை என்றே உணர்கிறான். ஆக, நன்மை, தீமை என்பன மனிதன் தேடிக் கண்டிபிடிக்க வேண்டிய அளவுக்கு மறைபொருள்களாக இல்லை. மனித உள்ளுணர்விலேயே அதை இறைவன் உணர்த்தியிருக்கின்றான். திருமறையில் இறைவன் கூறுவான்: فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰٮهَا“அதன் தீமையையும் தூய்மையையும் அதனுடைய உள்ளுணர்வில் வைத்தவன் மீதும் சத்தியமாக!” இஸ்லாத்தைப் பொறுத்தவரை அறம், நல்லொழுக்கம் என்பது நிலையானது. அது காலத்துக்கு ஏற்றார்போல் மாறக்கூடியது அல்ல. ஆனால், மனிதனின் சுயநலம், மனோ இச்சை, ஷைத்தானின் தூண்டுதல் காரணமாக அந்த அறமும் நல்லொழுக்கமும் சிதைக்கப்படுகிறது. சமூகத்தில் தீமைகள் பல்கிப் பெருகக் காரணி இதுதான். வாழ்வின் நோக்கம்…

Read More

ஒருங்கிணைந்த இந்தியாவில் அறிவுச் சமூகம் எதிர்கொண்ட மிகப் பெரிய சவால் ‘இந்தியாவுக்கு என ஒரு தனித்துவமான வரலாறு இல்லாமை’ என்பதாகத்தான் இருந்தது. அதனால் இந்திய விடுதலைக்கு முன்பு தேசிய பிரதேச அரசுகளின் தலைமையில் வரலாற்றை எழுதுவதற்கான முன்னெடுப்புகள் ஏராளமாக நடந்தன. ‘இறந்த காலம் குறித்த எந்தவிதமான விமர்சன உணர்வும் இல்லாத இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற எந்தத் தகுதியும் இல்லை’ என்று இந்தியாவின் நண்பனாகக் கருதப்பட்ட எட்வர்ட் தாம்சன் கூறியுள்ளார். அந்தச் சூழலில் வரலாற்று அறிவியலில் சுயசார்பும் தகுதியும் பெற வேண்டும் என்ற முடிவுக்குத் தேசியவாதிகள் வந்தனர். ‘ஷேக்ஸ்பியரையும் மில்டனையும் கற்கும் இந்தியர்கள், தங்களது முன்னோர்களைக் குறித்துக் கற்றுக்கொள்ள விருப்பம் காட்டாதது ஏன்?’ என லாலா லஜபதிராய் சுயவிமர்சனம் செய்தார். ‘வங்காளம் தன் வரலாற்றைக் கண்டடைய வேண்டும்’ என பங்கிம் சந்திர சட்டர்ஜி கேட்டுக் கொண்டார். இதையடுத்து R.C.தத் (1848-1909), R.Cபண்டார்கர் (1837-1925) ஆகியோர் பண்டைய இந்தியா குறித்து விரிவான…

Read More

NEET-PG 2023 முடிவுகளில் பூஜ்ஜிய சதவீத கட்ஆஃப் என்ற அதிர்ச்சியூட்டும் நிலைப்பாட்டை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) வன்மையாகக் கண்டிக்கிறது. மைனஸ் 40 மதிப்பெண்ணுக்குக் குறைவாக பெற்றவர்கள்கூட இதன் மூலம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர முடியும். இந்த மூர்க்கத்தனமான முடிவு, இந்தியாவின் மருத்துவக் கல்வியின் தரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. விண்ணப்பித்த அனைவரையும் சமரசம் செய்யும் இந்தச் செயல் ஆபத்தானது. முக்கியமான துறைகளில் நிபுணத்துவம் பெறுபவர்களையும், நாட்டின் சுகாதார அமைப்பின் தரத்தையும்கூட இது கேள்விக்குள்ளாக்குகிறது. மருத்துவக் கல்வியின் மீதான இந்த வெளிப்படையான அவமதிப்பு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆதாயத்தை அளித்து, பல கோடி ரூபாய்க்கு மருத்துவ இடங்களை விற்க வழிவகுக்கிறது. கல்வி வணிகமயமாக்கலை இது ஊக்குவிக்கிறது. NeXt போன்ற தெளிவான, நிலையான விதிகள் இல்லாததால் தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) சமீபத்திய நடவடிக்கைகள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதி செய்வதற்கான…

Read More

அரசு ‘மீலாது நபி’ தினத்தன்று விடுமுறை அளிப்பதை நாம் அறிவோம். மீலாது நபி என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த நாளுக்கு அப்படி என்ன சிறப்பு என்று யோசித்திருக்கிறீர்களா? மைக்கேல் ஹார்ட் என்ற அறிஞர் உலகின் போக்கையே மாற்றியமைத்த, வரலாற்றில் செல்வாக்கு மிகுந்த நூறு ஆளுமைகளை The Hundred என்ற தனது நூலில் வரிசைப்படுத்தினார். அதில் ஓர் ஆளுமைக்கு அவர் முதலிடத்தைத் தந்தார். உலகில் சுமார் 15 கோடி மக்கள் அந்தப் பேராளுமையின் பெயரைத் தம் பெயராகக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இன்று அந்தத் தலைவர் நம்முடன் இல்லை என்றாலும், அவரின் வழிகாட்டல்கள் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கக்கூடியவையாக உள்ளன. ஆம், அவர்தான் நபிகள் நாயகம் என்று அழைக்கப்படும் முஹம்மது நபிﷺ அவர்கள். அவரின் பிறந்தநாள்தான் மீலாது நபி என்று குறிப்பிடப்படுகிறது. உலகில் வாழக்கூடிய ஏறத்தாழ 790 கோடி மக்களில் சுமார் 180 கோடி முஸ்லிம் மக்கள் இவரைத் தம் தலைவராகவும், வழிகாட்டியாகவும்…

Read More

தேடல்கள், ஆய்வுகள், புது சிந்தனைகளின் ஒற்று மையங்கள் தான் உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்கள். ஒரு நாட்டின் ஜனநாயக சமூக விழுமங்களுக்கு எந்த அளவு இடம் உள்ளது என்பதை அறிந்து கொள்ள அங்குள்ள பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்து அறிந்தால் போதும் என்பார்கள். இந்தியாவில் இன்று நடைபெற்று வரும் எதேச்சதிகார ஆட்சியின் கோரத் தாண்டவம் பல்கலைக்கழகங்களிலும் அரங்கேறி வருகின்றன. இது மிகவும் ஒரு ஆபத்தான அறிகுறியாகத் தென்படுகிறது. இன்னும் 10 ஆண்டுகளை எட்டாத ஃபாசிஸ ஆட்சி அனைத்துத் துறைகளிலும்ஆதிக்க குணத்தின் எல்லா அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து வருகிறது. நாட்டின் மதவாத பாஜக அரசு அதன் தொடக்கக் காலம் முதலே மையப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் மாற்றுக் கருத்துகள், எதிர்ப்புக் குரலை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உலகப் புகழ்பெற்ற பல ஆளுமைகளை உருவாக்கிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்களை வேட்டையாடியது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்களைத் துன்புறுத்தியது, அதன் விளைவாக ரோகித்…

Read More

சமூகத்தில் மாற்றமும் முன்னேற்றமும் நிகழ்வது இளைஞர்களால்தான். அவர்கள் வரலாறு நெடுக சிந்தனை ரீதியான, நடைமுறை ரீதியான புரட்சிகளுக்கு உந்து சக்தியாய்த் திகழ்ந்துள்ளார்கள். இளைய தலைமுறையின் ஆற்றலை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) நன்கு உணர்ந்து, சிறந்த சமுதாயத்தை வார்த்தெடுக்கும் பொருட்டு அவர்களின் நல்லொழுக்கத்தையும் அறிவையும் அற உணர்வையும் செப்பனிட உறுதிகொண்டுள்ளது. “உங்களில் சிறந்தவர் உங்களில் நற்பண்புடையவரே!” – நபிகள் நாயகம் (ஸல்) கல்வி வளாகம் என்பது எதிர்மறையான சூழலைக் கொண்டிருக்காமல், கல்வியையும் ஒழுக்கத்தையும் செழித்தோங்கச் செய்யும் தளமாக இருக்க வேண்டும் என்று SIO கருதுகிறது. கல்வியை அடுத்த கட்டத்துக்கு மேம்படுத்துவதுடன், மாணவர்களை ஒழுக்கநெறிமுறைகளுக்கும், அறத்துக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழச் செய்து, எல்லா விதமான சமூகத் தீமைகளுக்கும் எதிரான போராட்டத்தை வழிநடத்துவோராக அவர்களைத் தயார்ப்படுத்துவதே எமது குறிக்கோளாகும். SIOவின் இலக்குகள் அறிவும் விழிப்புணர்வும்: உண்மையான அறிவையும், விழிப்புணர்வையும் மாணவர்களிடையே ஏற்படுத்துவது SIOவின் முதன்மைப் பணியாகும். சமூக விவகாரங்களை விமர்சனபூர்வமாக அணுகுவதற்கும், அறிவார்ந்த…

Read More

கடந்த மே 3ம் தேதியிலிருந்து பாஜக ஆட்சிபுரியும் மணிப்பூரில் வன்முறை நெருப்பு பற்றியெரிந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். இப்போது ஹரியானா உள்ளிட்ட வட இந்தியப் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அதில் முஸ்லிம்களின் உயிர், உடமைகள், வியாபாரம், வழிபாட்டுத் தலங்கள் முதலானவை அழிக்கப்படுவதோடு, முஸ்லிம் பெண்கள் மீதான வன்செயல்களும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. கடந்த இரு வாரங்களில் இந்துத்துவ பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட வன்முறைகளில் சில: ஜூலை 22 – குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவிலுள்ள ஒரு கிராமத்தில் பசு விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒரு முஸ்லிம் நபரை இந்துத்துவ கும்பல் கொடூரமான முறையில் தாக்கியுள்ளது. ஜூலை 25 – மத்திய அசாமில் 6 இளைஞர்கள் மீது பசுக்களைத் திருடியதாக பொய்க் குற்றம் சாட்டி சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் சதாம் உசேன் எனும் இளைஞர் உயிரிழந்துள்ளார்; ஐந்து இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த இளைஞர்களைக் காப்பாற்றச் சென்ற…

Read More

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் தமிழகத்து மாணவர்கள் அதிக இடங்களில் சேர்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ககந்தீப் சிங் பேடியிடம் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்ஐஓ) நேரில் சென்று வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு வலியுறுத்துவதன் பின்னணி என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றில் 5225 மாணவர்கள் கற்பதற்கான இடங்கள் இருக்கின்றன. பொதுவாகவே நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம் கற்கச் செல்லும் தமிழக மாணவர்களில் அநேகமானோர் 15% உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டில் (AIQ) தங்களுக்கான இடங்களை எடுப்பதில்லை. மாறாக, 85% உள்ள மாநில ஒதுக்கீட்டிலேயே தங்களின் இடங்களைப் பெறுகின்றனர். இதன் காரணமாக அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநிலத்தவர் அதிக இடங்களைப் பெறும் சூழல் உள்ளது. மட்டுமின்றி, கட்-ஆஃப் மதிப்பெண் சற்று குறைவாக எடுத்த…

Read More