எழுதியவர் : அபூ ஷேக் முஹம்மது 2013ஆம் ஆண்டு சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் எல்லையில் உள்ள கிராமப் புறங்களில் ஏற்பட்ட புரட்சிகள் காரணமாக சிரியாவின் அசாத் அரசு முற்றுகை இட்டது. அப்போது அங்கிருந்த மக்கள் தொகை மொத்தம் 400,000 பேர் ஆகும்.இந்த முற்றுகையின் இறுதி முடிவு மிகப்பெரிய தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது. அத்தியாவசிய உணவுகள் கூட விலை அதிகமாக இருந்தது. அது தற்போதைய 5 டாலருக்குச் சமமானது. போதிய உணவு இல்லாமையால் ஊட்டச்சத்து பற்றாக்குறை என்பது எதிர்பாராத விதமாக அதிகமாக இருந்தது. அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் CHA அலுவலகத்தின் அறிக்கையின்படி ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 11.9% பேர் ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன் காணப்பட்டனர். பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஒரேயொரு மருத்துவ உதவி குழுவை நஷாபியா (Nashabieh) பகுதியில் சிரிய அரசு அனுமதித்தது. ஆனால், ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் அனுமதியளிக்கபபடவில்லை.நிஷ்மா அல் ஹத்ரி (Nishma al Hatri), அல் ஜஸீரா பத்திரிகையாளரிடம் அளித்த நேர்காணலில்,…
Author: அபூ ஷேக் முஹம்மது
எழுதியவர் – அபூஷேக் முஹம்மத். வாழ்வும் சாவும் ஒருங்கே நிகழும் சிரியா கடந்த சில வாரங்களில் ரஷ்ய போர் விமானங்கள் மூலம் சிரியா அரசு தொடர்ந்து நடத்திய வான்வழிதாக்குதலில், கிழக்கு ஃகூவ்தா பகுதியில் உள்ள 400 க்கும் மேற்பட்ட சிரியாவின் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அல்ஜஸீரா ஊடகம் செய்திகள் அளிக்கின்றது. சிரியாவின் மனித உரிமை மீறல்களை கவனிக்கும் SOHR குழு கடந்த வியாழன் அன்று தெரிவித்த தகவலில் கிழக்கு ஃகூவ்தா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 403 குடி மக்கள்கொல்லப்பட்டது ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது, இந்த தாக்குதலில், 150 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். 2120 நபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறை கூட்டத்தில் சிரியாவின் அமெரிக்க தூதுவர் ஸ்டஃவ்ரன் டீ மிஸ்ரா கலந்து கொண்டு போரை உடனடியாக நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனாலும் ரஷ்யா போரைத் தொடர்வதாக கூறியுள்ளது கவனிக்க வேண்டியது.…