நாட்டின் போக்கையும் அதன் தலையெழுத்தையும் தீர்மானிக்கக்கூடிய மாணவர்கள், பொருளாதாரத்திலும், அரசியலிலும், கல்வி அமைப்பை உருவாக்குவதிலும், சமூகவியலிலும், விண்ணியலிலும், தகவல் தொழில்நுட்பவியலிலும் மிகப்பெரும் வல்லுநர்களாக உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் இந்த நாட்டில் உள்ள மக்களின் சமூகப் பிரச்சனைகளையும் சமூகத் தீமைகளையும் அகற்றுவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டு இந்த நாட்டை அமைதிமிக்க மற்றும் நீதிமிக்க சமூகத்தை உருவாக்குபவர்களாக மாற வேண்டும். இத்தகைய பொறுப்பு வாய்ந்த மாணவர் சமூகம் தற்போது போதை பொருட்களின் பிடியில் சிக்குண்டு நமது நாட்டின் போக்கை வீழ்ச்சி உர செய்து விடும் என்று என்ன தோன்றுகின்றது. குடியிருப்பு பகுதிகளிலும், பள்ளி கல்லூரிகளுக்கு அருகிலும் போதைப் பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகி இருப்பது மிகவும் மோசமான சூழல் உருவாகி இருப்பதை காட்டுகின்றது. எங்களது பிள்ளைகள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருக்கின்றார்கள்; அவர்களை காப்பாற்றுங்கள் என்று கதறும் பெற்றோர்களின் குரல்கள் நம்மை நடுநடுங்கச் செய்கின்றன…! எங்கே நமது பிள்ளைகளும் அவர்களைப் போன்ற சூழல்களில் சிக்கி…