சென்னைப் பல்கலைக் கழக இதழியல் மாணவர்களின் போராட்டம் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்கிறது. இதழியல் துறைத் தலைவரின் எச்சரிக்கை, மிரட்டல்கள, மாணவர்கள் மத்தியில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டி விட்டுப் பிளவுபடுத்தும் முயற்சிகள், தனக்கு ஆதரவாக உள்ள சந்தர்ப்பவாத சக்திகளை முடுக்கி விட்டு போராடும் மாணவர்களைக் கொச்சைப் படுத்திப் பேசச் செய்து மிரட்டுதல், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி ஊடகங்களில் தனது அத்து மீறல்களை நியாயப்படுத்துதல் எனப் பல வழிகளில் துறைத் தலைமை மிரட்டியும் போராட்டம் தொடர்கிறது.. தொடர்வது மட்டுமல்ல இன்று மேலும் ஆறேழு மாணவர்கள் கூடுதலாக இந்த அமர்வுப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தனது மிரட்டல்களால் பயந்து மாணவர்கள் பின்வாங்குவார்கள் என நினைத்த துறைத் தலைமை இன்று போராட்டத்தில் புதிதாய்ப் பங்குபெற்ற மாணவர்களைத் தனித் தனியே அழைத்து மிரட்டியுள்ளது. போராடும் மாணவர்கள் இடதுசாரி அமைப்பிற்கு ஏதோ ஒரு காலத்தில் ஆதரவாக இருந்திருந்தால் அவர்களைத் தீவிரவாதிகள் என்பது, மத அடிப்படையில் பயங்கரவாதிகள் என்பது… எல்லாம்…
Author: ஆர். அபுல்ஹசன்
சென்னை பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் துறையில் மாணவர்களிடையே பிரிவினையைத் தூண்டிவிட்டு ஒரு தரப்பு மாணவர்களை தீவிரவாத முத்திரை குத்தும் வேலையை துறைத் தலைவரே மேற்கொண்டுள்ளது மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக ஊடகவியல் துறை தலைவரைக் கண்டித்து துறை மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் துறை தலைவர் ரவீந்திரன் என்பவர், தான் நடத்தி வரும் ‘முற்றம்’ என்ற அமைப்பில் பங்குகொள்ளாத மாணவர்களை தேர்வுகளில் தோல்வி அடையச் செய்துள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட மாணவர்கள் மீது நக்சலைட்கள் என்று முத்திரை குத்தி அவர்களது எதிர்காலத்தை பாழ்படுத்திவிடுவதாகவும் குடும்பத்தினர் மீது பாலியல் வழக்கு போடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். தனது பரிந்துரையில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களை அந்த மாணவர்களுக்கு எதிராக தூண்டிவிட்டு மோதலை ஏற்படுத்தும் வேலையையும் ரவீந்திரன் செய்து வருகிறார். அவரது இந்த நடவடிக்கைகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரிந்திருந்தும் அவரது அரசியல் செல்வாக்காலும், பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவில் அவர்…
பள்ளிக் கல்வியும், உயர்கல்வியும் தரமற்றதாகிவிட்ட இன்றைய சூழலில் கல்வியாளர்களும், மாணவர்களும் நம்பிக்கை வைத்திருந்தது பல்கலைக்கழகங்கள் மீதுதான். அதிலும் புற்றீசல் போல பெருகியுள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பணம் வாங்கிக் கொண்டு பட்டம் வழங்கும் வியாபார நிறுவனங்களைப் போல செயல்படுவதால் அரசு பல்கலைக்கழகங்கள் மீதே மாணவர்களின் ஆர்வம் இருந்து வந்தது. அங்கே சேர்ந்து கல்வி கற்பது ஒரு பெருமையாகவும், அதே நேரத்தில் சிறந்த, தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் மூலம் பயிற்றுவிப்பதால் கற்றலின் தரமும் சிறப்பாக இருப்பதாக நம்பப்பட்டு வருகின்றது. ஆனால் சமீபகாலங்களில் அரசு பல்கலைக்கழகங்கள் பற்றி செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் வரும் செய்திகள் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதாக இல்லை. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி, தகுதியின் அடிப்படையில் அல்லாமல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்டு வருவது அதிகரித்துள்ளது அப்பட்டமாகத் தெரிகின்றது. விளைவு பல்கலைக்கழக நிர்வாகங்களில் ஊழல் மலிந்து வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது முறைகேடு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது நினைவிருக்கலாம். பிறகு சென்னை…
ஒரு படத்தில் “Loveன்னா என்ன” ன்னு விவேக் கேட்கும்போது துணை நடிகர் “.ரூம் போடுறது” என்று துணைநடிகர் சொல்வதுபோல ஒரு காட்சி இருக்கும். நேற்று பார்த்த ஒரு குறும்படத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி கர்ப்பமாக காரணமான சிறுவன் மாணவியின் தாயிடம் ,”தெரியாம பண்ணிட்டோம், இதான் லவ்வுன்னு நெனச்சுட்டோம்” என்று சொல்லி கதறி அழுவான்..! ஆண்-பெண் காதலை கொச்சைப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உண்மையில் காதல் என்பதை இன்றைய விடலைகள் எப்படி புரிந்து கொண்டுள்ளார்கள், அல்ல அல்ல புரிந்து கொள்ள வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உணர்த்தவே மேலே உள்ளதை எழுதியிருக்கிறேன். இறைவன் இயற்கையிலேயே ஆண்-பெண்ணிற்கிடையே ஒருவித ஈர்ப்புணர்வை ஏற்படுத்தியுள்ளான். ஆண்களும் பெண்களும் திருமணம் என்ற வரையறைக்குள் இணைந்து மனித இனம் பல்கிப் பெருக வேண்டும் என்பதே அந்த ஈர்ப்புணர்வின் மூலகாரணமாக உள்ளது. அந்த ஈர்ப்புணர்வையே இன்று காதல் என்று தலைமேல் வைத்து கொண்டாடுகின்றனர். Love என்கிற ஆங்கில வார்த்தைக்கு அன்பு என்பதே…
இந்தியாவின் அலுவலகப் பூர்வமான தலைநகரம் புதுடில்லியாக இருக்கலாம். ஆனால் நிதர்சனத்தில் அதிகாரப்பூர்வமாக இந்திய அரசு நாக்பூரில் இருந்தே இயங்குகின்றது. கொள்கை உருவாக்கங்கள், அரசு முடிவுகள், அதிகாரப் பகிர்வுகள், உயர் பதவிகளுக்கான நியமனங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் தலைமையின் ஒப்புதலுக்கு பிறகே முடிவு செய்யப்படுகின்றது. உண்மையில் நரேந்திர மோடி ஒரு முகமூடி மட்டுமே. அந்த முகமூடிக்கு உள்ளே இருக்கும் உண்மை முகம் RSSன் முகமே. ஆர்.எஸ்.எஸ் உருவாக்கப்பட்டு நூறு வருடங்களை நெருங்கி வரும் சூழலில், சிறிது சிறிதாக இந்தியாவின் ஏகபோக அதிகாரம் அவர்களின் கைகளுக்குள் செல்வது போன்ற தோற்றம் மூன்று வருடங்களுக்கு முன்பு சிறு புள்ளியாக இருந்து உ.பி தேர்தல் வெற்றி மூலம் பூதாகரமாகி நிற்கின்றது. தற்போது 16 மாநிலங்களில் அவர்களது ஆட்சி பரந்து விரிந்து கிடக்கின்றது. அதிகார வெறி எவ்வளவு தலைக்கேறியிருந்தால் ஆட்சியமைக்க தகுதியே இல்லாத மணிப்பூர், கோவா போன்ற மாநிலங்களில் கூட ஆட்சியைக் கைப்பற்றி இருப்பார்கள். தமிழகத்திலும் புறவாசல் வழியாக ஆட்சியை…