Author: ஆர். அபுல்ஹசன்

தற்போதைய தமிழக அரசில் எந்த துறையின் செயல்பாடு திருப்தியளிக்கும் வகையில் உள்ளது என்று கேட்டால் ஓரளவிற்கு விவரம் தெரிந்தவர்கள் சட்டென்று பள்ளிக் கல்வித்துறை என்று சொல்வார்கள். செங்கோட்டையன் அமைச்சராக இருப்பதைவிட உதயசந்திரன் அவர்கள் பள்ளிக் கல்வித்துறையில் பொறுப்பில் இருந்ததால் பல்வேறு மாற்றங்களை பள்ளிக் கல்வித்துறையிலும், பாடத்திட்டங்களிலும் உருவாக்கப்பட்டு வந்துள்ளன. ஏற்கனவே பல வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில் தற்போது 10,12 ம் வகுப்புகளுக்கான பாட புத்தகங்கள் உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. பாடத்தைத் தாண்டி புதுமையான வழிகளில் அறிவைப் பெருக்கிக் கொள்ளும் நடைமுறைகள் பாடப் புத்தகங்களில் புகுத்தப்பட்டுள்ளது. இணையம் வழியாக QR கோட் பயன்படுத்தி பாடங்களுக்கு தேவையான வீடியோக்களை தரவிறக்கம் செய்து மாணவர்கள் பயன்பெறும் வழிமுறைகள், போட்டித் தேர்வுகளுக்காக தயாராகும் வகையிலான பிரிவுகள் என்று பாடங்களை எளிமையாகவும், நவீனமாகவும் பயிற்றுவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த சூழலில்தான் உதயச் சந்திரன் துறைமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒரு துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை…

Read More

பெஹ்லுகான் எந்த இடத்தில் கொல்லப்பட்டாரோ அதே இடத்தில் ஒரு வருடத்திற்கு பிறகு அக்பர்கான் கொல்லப்பட்டுள்ளார்.. எந்த காரணத்திற்காக பெஹ்லுகான் கொல்லப்பட்டாரோ அதே காரணத்திற்காகத்தான் அக்பர்கானும் கொல்லப்பட்டுள்ளார்.. இராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் மாடுகளை சந்தையில் இருந்து வாங்கிக் கொண்டு திரும்பிய அக்பர்கானை பசு பயங்கரவாதிகள் அடித்து காயப்படுத்தியுள்ளனர். ஆனால் கொலை செய்தது காவல்துறையினர்.. அதிகாலை ஒரு மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பொறுமையாக காலை நான்கு மணிக்கு காவல்நிலையத்தில் இருந்து சரியாக ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். ஆனால் அப்போது அக்பர்கான் இறந்துவிட்டிருந்தார். இடைப்பட்ட நேரத்தில் காவல்துறையினர் அக்பர்கானிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை அருகில் இருந்த கொட்டகைக்குள் பாதுகாப்பாக அடைத்து வைத்துவிட்டு, வழியில் வாகனத்தை நிறுத்தி களைப்பு தீர டீ சாப்பிட்டுவிட்டு பிறகு அக்பர்கானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த அக்பர்கானை காவலர்கள் வாகனத்திற்குள் வைத்து தாக்கியதாக நேரில் கண்ட பெண்…

Read More

(மொழிபெயர்ப்புக் கட்டுரை – ஆங்கிலத்தில் எழுதியவர்: முகமது அசாருதீன், தேசிய செயலாளர், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு) தமிழில் – R. அபுல்ஹசன் எட்டு மாதங்களுக்கு முன்பு முதல்முறையாக அசாமிற்கு சென்றதில் இருந்து ‘சந்தேகத்திற்குரிய வாக்காளர் ‘(D-Voters), அசாம் குடிமக்கள் தேசியபதிவு (NRC) பிரச்னைகளைப் பற்றி ஆய்வு செய்யத் துவங்கினேன். களநிலவரத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பால் (SIO)  எனது தலைமையில் அனுப்பப்பட்ட குழுவின் மூலம் அறிவுஜீவிகள், வழக்குரைஞர்கள், சமூகபோராளிகள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள்,  மத்திய, மாநில அரசுகளால் வஞ்சிக்கப்பட்ட பொதுமக்கள் என்று பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினோம். முழுமையான ஆய்வறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றாலும் இந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள அசாமில் வாழும் இந்திய குடிமக்களின் அவலநிலை பற்றிய உண்மைத் தகவல்கள் தேசத்தின் பிறமாநில மக்களால் இன்னும் அறியப்படவில்லை என்பதால் அதைக் குறித்து விரைவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.  பின்வரும் அறிக்கை அசாம் மக்களுடனான கலந்துரையாடலில்…

Read More

மரணத்தால் மரத்து போகும் மனங்கள் மீண்டும் ஒரு மலர் வாசனையை வெளிப்படுத்தும் முன்பே உதிர்ந்துவிட்டது. மகள் மருத்துவராக வந்து தங்கள் ஏழ்மை பிணி தீர்ப்பாள் என்று வாஞ்சையுடன் இருந்த பெற்றோர்களுக்கு வாழ்நாள் முழுதும் தீராப் பிணி தொற்றிக் கொண்டுள்ளது. அன்று தேர்வு முடிந்து வந்து அப்பா எங்கே என்று கேட்டான் ஒரு மகன். இன்று தேர்வு முடிவு வந்ததும் என் மகள் எங்கே என்று கேட்கின்றனர் ஒரு தாய்,தந்தை. அனிதா, கிருஷ்ணசாமி, இப்போது பிரதீபா. மனுவின் நீதிக்காக பலியிடப்பட்ட கன்றுகள். ஆனால் எத்தனை முறை மணியை அடித்தாலும் நீதி மட்டும் கிடைப்பதில்லை. அன்று பசுவின் கதறலைக் கேட்டு மகனையே பலியிட்டதாக சொல்கிறது புராணம்.  ஆனால் இங்கு மீண்டும் மீண்டும் கன்றுகளே பலியிடப்படுகின்றன. எம் பிள்ளைகளின் ஆடை, ஆபகரணங்களை அவிழ்த்துப் மானத்தை அழித்தார்கள். தமிழனா, நீதான் மானம் இழந்து உயிர் வாழ மாட்டாயே என்று இப்போது உயிர்களையும் பறித்துவிட்டு எட்டி நின்று சிரிக்கிறார்கள்.…

Read More

வாட்சப் வதந்தி ஒரு உயிரைக் காவு கொண்டுவிட்டது..! இரண்டு நாட்களாக குழந்தைகள் கடத்தல் தொடர்பாக வாட்சப்பில் பரவிய உறுதிப்படுத்தப்படாத தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இன்று திருவண்ணாமலையில் கோவில் வழிபாட்டிற்கு வந்த ஒரு குடும்பத்தினரை குழந்தைக் கடத்தல் கும்பல் என்று 500க்கும் மேற்பட்ட நபர்கள் தாக்கியதில் ஏறக்குறைய 60 வயதை நெருங்கும் ஒரு பெண்மணி கொல்லப்பட்டுள்ளார். அவர் செய்த தவறு குழந்தைக்கு சாக்லேட் கொடுத்தது..இத்தனைக்கும் அவர்கள் தாக்கப்பட்ட போது தங்களது பாஸ்ப்போர்ட்டை எடுத்துக் காட்டியுள்ளனர். அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அங்கிருந்த ஒருவர் கூட இல்லை. அனைவரையும் வாட்சப் தகவல்கள் போதையேற்றி வைத்திருக்கிறது. வரிசையாக குழந்தைகள் வன்புணர்வு செய்திகள் வந்தபோது குழந்தைகள் மீது இயல்பான பாசம் உள்ளவர்கள், குழந்தை இல்லாத ஏக்கத்தை உறவினர், அண்டை வீட்டு குழந்தைகளை கொஞ்சுவதன் மூலம் தீர்த்துக் கொண்டவர்கள் இனி குழந்தைகளை நெருங்கினாலே தவறான முத்திரை குத்தப்பட்டுவிடுமோ என்று அஞ்சத் துவங்கினார்கள். இப்போது இந்த சம்பவத்தால் குழந்தைகளின் அருகில்…

Read More

பாஜகவின் தேர்தல் உத்திகள் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. தனது சாதனைகளையோ எதிர்க்கட்சியின் தவறுகளையோ சொல்லி பிரச்சாரம் செய்வது ஒரு வகை. விமர்சனம் மூலமோ, தனிநபர் எதிர்ப்பு விமர்சனம் மூலமோ பிரச்சாரம் செய்வது ஒருவகை. ஆனால் பாஜகவோ இது எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரியாக பிரச்சாரம் செய்வதைத்தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் துவங்கி தற்போதைய கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரைக்கும் பின்பற்றுகிறது. அந்த யுத்தியை முன்நின்று வழிநடத்திக் கொண்டு செல்வது வேறுயாருமல்ல, நமது பிரதமரேதான். இடத்திற்கு தகுந்தாற்போல மாற்றிப் பேசுவது மோடிக்கு கைவந்த கலை. ஆசிஃபா பற்றி இங்கிலாந்தில் பேசிய பிரதமர் கற்பழிப்பை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று பேசிவிட்டு கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் தலித் பெண்கள் கற்பழிப்புக்கு காங்கிரஸ் என்ன பதில் வைத்திருக்கிறது என்று கூசாமல் மாற்றிப் பேசினார். மதத்தை வைத்து பிளவுடுத்தி, அச்சுறுத்தி வாக்குளை கவர்வது பாஜகவின் இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. இப்போது அவர்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் பொய்யைச் சொல்லி…

Read More

இந்து தமிழ் நாளிதழில் திரு.பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி எழுதியிருந்த கட்டுரை படித்தேன். அதில் நீட் – தேர்வு மையக் குளறுபடி பற்றி மத்திய அரசின் சர்வாதிகாரத்தனமான நடவடிக்கைகளை ஆதரிப்பது போல எழுதியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தக் கட்டுரையை சமர்ப்பிக்க விரும்புகிறேன். இரயில்வே தேர்வுகளின்போது தேர்வு மையங்களின் வெளியே எத்தனை வட இந்திய இளைஞர்கள், இளம்பெண்கள் இருக்கிறார்கள்.? முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இரண்டு நாட்கள் பயணம் செய்து வருகிறார்கள் என்கிறார் . (வட இந்தியர்கள் முன்பதிவு செய்யாவிட்டாலும் முன்பதிவு பெட்டிகளில்தான் வருவார்கள் என்பது வேறு விசயம்) உண்மைதான், நானும் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் குடும்பம் சகிதமாக தேர்வுக்கு வந்த வட இந்தியர்களை பார்த்திருக்கின்றேன். இங்கே வித்தியாசப்படுத்திப் பார்க்க வேண்டியது அவசியம். படித்து முடித்து வேலைக்காக மத்திய பணியாளர் தேர்வு வாரியம், இரயில்வே துறை போன்ற அமைப்புகள் நடத்தும் தேர்வுகளை எழுத வருபவர்களை பள்ளிப்படிப்பு முடித்த சிறுவர், சிறுமியரோடு ஒப்பிடுவது பாரபட்சம் இல்லையா?…

Read More

காஷ்மீர் மீண்டும் தேசத்தின் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகின்றது. ஆனால் இந்த முறை கல்வீச்சு, தனிநாடு போராட்டம், இறுதி ஊர்வல கலவரம் என்று வழக்கமாக வருவதைப் போல் இல்லாமல் வித்தியாசமான் செய்தியுடன். காஷ்மீர் என்றாலே இந்திய மக்களுக்கு நினைவுக்கு வருவது இராணுவம் மீதும், காவல்துறை மீதும் கற்களை வீசும் சிறுவர்கள், வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த கையோடு இந்தியாவிற்கு எதிராக போராடும் தொப்பி, ஜிப்பா, தாடி வைத்த மக்கள். திரும்பத் திரும்ப இவற்றைத் தான் தேசிய ஊடகங்கள் என்று சொல்லப்படும் ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகள் நமக்கு காஷ்மீர் என்ற பெயரில் காட்டி வருகின்றன. நாமும் காஷ்மீர் என்றால் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதிகள் நிறைந்த பகுதி என்றே எண்ணுகின்றோம். ஆனால் உண்மையில் பனிச்சிகரங்களாலும், மலைகளாலும் சூழப்பட்ட இடம். பூக்களின் தேசம் என்று அழகுற அழைக்கப்பட்ட பள்ளத்தாக்கு. பார்ப்பதற்கு ரம்மியமான, பூமியின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்பட்ட காஷ்மீருக்கு இன்று ஏன் இந்த இழிநிலை? அமைதியாக வாழ…

Read More

உத்திர பிரதேசத்தில் ஆளும் பாஜக எம்எல்ஏ மற்றும் அவரது கூட்டாளிகளால் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட 16 வயது சிறுமி முதல்வர் அலுவலகம் முன்பு தற்கொலை செய்ய முயன்றார்.  தொடர்ச்சியான புகார்களுக்கு  பின்பும் முதல் தகவல் அறிக்கை பதியப்படவில்லை. அந்த சிறுமியின் தந்தை, கற்பழித்த எம்எல்ஏவின் தம்பியால் கடுமையாக தாக்கப்பட்டதுடன், பொய் வழக்கு போட்டு கைது செய்யப்பட்டார். அவர் நேற்று இறந்துவிட்டார். ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமியான ஆஷிஃபா கடத்தப்பட்டு 8 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு கொடூரமாக வன்புணர்வு செய்யபபட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு பேரால் கற்ப்பழிக்கப்பட்ட பின்பு சுவற்றில் அடித்து கொலை செய்யப்பட்டார். மரணித்த பின்பும் ஒரு காவல் அதிகாரியால் மீண்டும் வன்புணர்வு செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி அந்த சிறுமியின் சமூகத்தைச் சார்ந்த மக்களிடையே அச்சத்தை விதைக்கவே இந்த செயலை செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளான். ஆளும் பாஜகவின் மாநில செயலாளர், இந்துத்துவ இயக்கமான ஏக்தா மன்ச் இணைந்து…

Read More

பெண்கள் தினம் அனுசரிக்க ஆரம்பித்து நூறு வருடங்களை கடந்தாகிவிட்டது. இந்த ஒரு நூற்றாண்டில் பெண்கள் அவர்களுக்குரிய இடத்தை சமுதாயத்தில் அடைந்துவிட்டனரா என்ற கேள்வியை கட்டாயம் நாம் கேட்கத்தான் வேண்டும். பெண்கள் சமுதாயத்தின் பிரிக்க முடியா அங்கங்கள். ஒரு சமுதாயம் மாற்றம் காண வேண்டும் என்றால் அச்சமுதாயத்தில் உள்ள ஆண், பெண் என தனிநபர்களிடத்தில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே சாத்தியம். அதிலும் குறிப்பாக ஆணிடம் ஏற்படும் மாற்றம் அந்த ஆணுடனேயே அடங்கிவிடும். ஆனால் ஒரு பெண்ணிடம் ஒரு கருத்துருவாக்கம் ஏற்படுகின்றது என்றால் அவளுக்கு அடுத்து வரும் தலைமுறையினையே அம்மாற்றம் கவ்விப்பிடித்துக் கொள்ளும் என்பதுதான் நிதர்சனம். இன்று நாம் ஆண்களை மையமாகக் கொண்ட சமூக அமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இங்கு பெண்கள் தங்களுக்கான அடிப்படை உரிமைகளைக்கூட பெறவிடாமல் தடுக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வந்துள்ளனர். அவற்றை மீட்பதற்காக பெண்களும், பெரியார் போன்ற போராளிகளும் நிறைய உழைத்துள்ளனர். விளைவு நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியில் பெண்கள் பல்வேறு முன்னேற்றங்களை, உரிமைகளைப் பெற்றுள்ளனர்.…

Read More