Author: ஆர். அபுல்ஹசன்

ஆற்றாமையின் அர்த்தமான ஆறாம் தேதி அந்த நாளில்தான் இந்தியாவின் இறையாண்மை கடப்பாரைகளுக்கு இரையானது மதிலுடன் சேர்த்து மனிதமும் இடிக்கப் பட்டது வேற்றுமையில் ஒற்றுமையென்பது வேருடன் பிடுங்கியெறியப்பட்டது கதறலும்,கடப்பாறையின் சத்தமும் கலந்து கலங்கடித்து களியாட்டம் போட்டது பாரதத்தாயிடம் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையின் வாயுடன் மாரும் சேர்த்து அறுக்கப்பட்டது பெரும்பான்மையினரின் குரல் என்ற போர்வையில் சிறுபான்மையினரின் குரல்வளை நெறிக்கப்பட்டது காந்தி மகானை வீழ்த்தியவர்கள் கண்ணியமான மசூதியையும் தகர்த்தனர் கரசேவையின் பெயரில் நரசேவை நடந்தேறியது இப்போது செய்யப்பட்ட அறுவடையின் முதல் விதை விதைக்கப்பட்டதும் அன்றுதான் சுதந்திர இந்தியாவைக் கட்டமைக்க ஒரு செங்கல்லைக் கூட நகர்த்தாதவர்கள் அதற்காக சிந்தப்பட்ட இரத்தத்தை தங்கள் சிறுநீர் கொண்டு கழுவிய நாள் தட்டிக் கேட்க வேண்டியவர்கள் எதனைக் கொண்டோ கட்டிப்போடப்பட்டனர்.l ஒரு தலைமுறையாய் அலைகிறோம் நீதி வேண்டி நீதி வழங்க வேண்டியவர்கள் பாதி பாதியாக பிரித்து வழங்கினர் நம்பிக்கையின் அடிப்படையில் உண்மை எப்போதுமே தூங்காது அதர்மம் எப்போதுமே ஓங்காது இந்த…

Read More

அடுத்தவர் வழங்கிய நிவாரணத்திற்கு உரிமை கோரும் இந்து மகாசாபா பிறர் செய்த பணிகளை தாங்கள் செய்ததாகவும், பிற நாட்டு நற்பணிகளை மோடி ஆட்சி பணிகளாகவும் சமூக வலைதளங்களில் பரப்பி பெருமை பீத்திக் கொள்வது பாஜகவினருக்கு கைவந்த கலை. அந்த நல்ல பழக்கம் இப்போது புயல் நிவாரணத்திலும் தொடர்கிறது. ஆனால் இந்த முறை அதனை செய்தது பாஜக அல்ல, கோட்சேவிற்கு சிலை வைப்போம் என்று சொன்ன இந்துமகாசபா. கஜா புயல் நிவாரணத்திற்காக இந்து மகா சபா பேரிடர் குழு திருத்துறைப்பூண்டி சுற்றியுள்ள கிராமங்களில் நிவாரணப் பொருட்கள் விநியோகித்ததாக 26.11.2018 தேதியிட்டு சில புகைப்படங்கள் வாட்சப்பில் வந்தது. அந்த புகைப்படங்களை எங்கோ பார்த்தது போல இருந்ததாக தோன்றியதால் நமது நண்பர்களிடம் விசாரித்தோம். அந்த புகைப்படங்கள் உண்மைதான், செய்தியும் உண்மைதான். ஆனால் நிவாரணப் பொருட்களை விநியோகித்தது இந்து மகா சபா அல்ல, இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர்(SIO)  என்று தகவல் கிடைத்தது. நாகூர் SIO சகோதரர்கள்…

Read More

தேசபக்தி என்று தூக்கத்தில் கூட உளறும், சுதந்திரப் போராட்ட வீரர் என்று படேலுக்கு மிகப்பெரிய சிலை வைக்கும் பாஜகவிற்கு பிரிட்டிஷாரை எதிர்த்து தீரத்துடன் போரிடுவதிலேயே தனது வாழ்நாள் முழுவதையும் கழித்த திப்பு சுல்தான் மீது ஏன் தீரா வெறுப்பு? வரலாற்றில் பின்னோக்கி சென்றால் திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டார் என்பதும், ஆங்கிலேயர்கள் திப்பு என்ற பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்கினார்கள் என்பதும் அழிக்க முடியாத வரலாறாக இடம்பெற்றுவிட்டவை. திப்பு சுல்தான் மட்டுமல்ல, அவரது தந்தை ஹைதர் அலியும் கூட ஆங்கிலேயர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்தவர். அவரையும் இவர்களுக்கு பிடிப்பதில்லை. அன்றைய காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து அத்தனை தீரத்துடன் போரிட யாரும் இருந்திருக்கவில்லை. திப்பு ஆங்கிலேயர்களை போரில் வெற்றி பெற்றிருந்தார். கடைசி ஆங்கிலோ-மைசூர் போரில் வீரமரணம் அடைந்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக மராத்தியர்களையும், நிஜாம்களையும் ஒன்றிணைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் மராத்தியர்களும், நிஜாம்களும் திப்புவை கைவிட்டனர். ஆங்கிலேயரை எதிர்த்து போரிட நெப்போலியனின் உதவியையும்…

Read More

மீண்டும் மீண்டும் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு விவாதத்திற்குள்ளாக்கப்படுகிறது. பல தசாப்தங்களாய் நீடிக்கும் நிதர்சனம் தான் என்றாலும் சமூக ஊடகங்களின் அசுரப் பாய்ச்சலால் சமீப காலங்களில் பெண்கள் வன்கொடுமை, பணியிட தொந்தரவுகள், குழந்தைகள் சித்ரவதை போன்றவை பற்றிய செய்திகள் அதிகம் விவாதிக்கப்படுகின்றன. எதிர்ப்பு பிரச்சாரங்கள், விழிப்புணர்வு இயக்கங்கள் போன்றவை மூலமும் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக தங்கள் வேதனைகளை உலகிற்கு தெரியப்படுத்துவதாலும் பெண் பாதுகாப்பு பற்றி தேசம் பேசுகின்றது. உலகளவில் பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுதியில்லாத நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு ஊடகங்களில் செய்திகள் வந்தன. அப்படிலாம் கிடையாது, என் தேசம் பெண்களுக்கு பாதுகாப்பானது என்று மார்தட்டி சொல்லலாம் என்று உதடுகள் துடிக்கிறது. ஆனால் உண்மை நிலவரம் தடுக்கிறது. பொதுவாக இந்த ஆய்வுகள், கருத்துக்கணிப்புகளின் மீது அவ்வளவாக ஈர்ப்பு ஏற்படுவதில்லை. ஏனென்றால் அவை நூறில் ஒரு மடங்கிற்கும் கீழான எண்ணிக்கையிலான நபர்களிடம் இருந்து தருவிக்கப்படும் முடிவுகள். ஒருபோதும் அவை ஒட்டுமொத்த மக்களின்…

Read More

காஷ்மீர் காஷ்மீர் இதுதான் காஷ்மீர் நிலவும் வெடிக்கும் நிலம்தான் காஷ்மீர்.. கனவும் எரியும் களம்தான் காஷ்மீர்.. தொப்பி ஜிப்பாவுடன் ஒரு இளைஞர் நடந்து வருகிறார்.. அங்கிருக்கும் சீருடை அணிந்த சில இராணுவ வீரர்கள் அந்த இளைஞரை அழைக்கிறார்கள். யார் நீ என்று வீரர்கள் கேட்கும்போது ஓட்டு போட்டுவிட்டு வீட்டுக்கு போவதாக சொல்கிறான் அந்த இளைஞன். எப்டி நம்புறது, கல்லெறியுற கூட்டத்துல நீயும் ஒருத்தன்தானே என்று வீரர்கள் அந்த இளைஞனை சுற்றி வளைக்கின்றனர். சார் உண்மையிலேயே ஓட்டு போட்டுவிட்டு வருகிறேன், விரல்ல மை இருக்கு பாருங்க, அம்மா சால்வை செஞ்சுட்டு காத்துக்கிட்டிருப்பாங்க, நான் போய் அத விக்கணும் என்று தன்னை நிரூபிக்க துடிக்கும் இளைஞனை சட்டை செய்யாமல் அவனை இழுத்து கைகளை சங்கிலியால் பிணைத்து இழுத்து செல்கின்றனர். ஒரு வீடு, அந்த வீட்டிற்குள் சில பெண்கள் சால்வை நெய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்குள் உரையாடல் நிகழ்கிறது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டு வந்த நிலையில்…

Read More

அக்டோபர் 19, இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு(SIO) இம்மண்ணில் விதையாக தூவப்பட்டு 36வது ஆண்டை நிறைவு செய்து 37வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த 36 ஆண்டுகளில் அந்த விதை வேர்விட்டு, செடியாகி, கிளை பரப்பி, விருட்சமாக பரிணமித்துள்ளது. இந்தியாவின் 27 மாநிலங்களில் அமைப்புச் சட்டத்திற்குட்பட்டு, ஒழுக்கத்திலும், கல்வியறிவிலும் சிறந்து விளங்கக் கூடிய, தலைமைக்கு கீழ்படியும் கட்டுக்கோப்பான ஊழியர்களை வார்த்தெடுத்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய மாணவ இயக்கமாகவும், ஆசியாவின் இஸ்லாமிய மாணவர் அமைப்புகளின் இந்தியப் பிரதிநிதியாகவும், மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் UNESCO சிறந்த மாணவர் அமைப்பாகவும் பல்வேறு அங்கீகாரங்களை தனக்கு உரித்தாக்கிக் கொண்டு தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. SIO ஊழியர்களில் ஆயிரக் கணக்கானோர் முனைவர்களாகவும், பல்துறை நிபுணர்களாகவும், இஸ்லாமிய இயக்கத்தின் தளகர்த்தர்களாகவும் திறம்பட பணியாற்றி வருகின்றார்கள். Creative Campus, Lead the change, Redefining education- Regaining struggle-Renovating society போன்ற முக்கியத்துவம் வாய்ந்த முழக்கங்களை SIO உருவாக்கி முன்னெடுத்துள்ளது.…

Read More

அலுவலக வேலையாக நான் வெளிநாட்டில் ஒரு வருடம் இருந்தேன். திரும்பி வருகையில் விமான நிலைய வாசலில் என் தாய் என்னை ஓடி வந்து கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு வரவேற்றார்கள். வேலைக்காகச் சென்றிருந்தேன் என்றாலும் என்னை விட்டு நீண்ட காலம் பிரிந்திருந்த என் தாயின் மனநிலையை என்னால் உணர முடிந்தது. இன்று உச்ச நீதிமன்ற வளாகத்தில் என் தாயின் வயதை ஒத்த ஒரு தாய் தன்னந்தனியாக அலைந்து கொண்டிருக்கின்றார். அந்தத் தாய்க்கும் ‘நஜீப் அஹமது’ என்ற பெயரில் என்னைப் போன்ற ஒரு மகன் இருந்திருக்கின்றார். அவருடைய அந்தத் தாயை விட்டு  அவர் பிரிந்து இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகின்றது. ஆனால் அந்தத் தாய்க்குத் தன் மகன் எங்குச் சென்றார் என்பது தெரியாது. உயிரோடு இருக்கின்றாரா, மரணித்து மண்ணோடு மண்ணாகிவிட்டாரா? தெரியாது. பத்து மாதங்கள் சுமந்து வலி தாங்கிப் பெற்றெடுத்து, இரத்தத்தைப் பாலாக்கி, தான் உண்ணாமல் அவனுக்கு ஊட்டி, தான் உறங்காமல் அவனை உறங்கச்செய்து…

Read More

2005 நான் பள்ளி முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்த வருடம். நண்பர்கள் கொண்டு வரும் ஒன்றிரண்டு கிங் சைஸ் நோட் புக்கில் நடிகர் நடிகைகள், க்ரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் அலங்கரிக்கும். அப்போது எந்த புகைப்படத்துடன் நோட்டு புழக்கத்தில் இருந்ததோ அதே புகைப்படத்துடனான நோட்டு புத்தகத்தை பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் பயன்படுத்துகிறார்கள். அப்போது ஆர்எஸ்எஸ் தலைவராக இருந்தவர் சுதர்சன். சுதர்சன் மீது செருப்பு வீச்சு என்று கடையில் தொங்கும் தினசரி வால் போஸ்டரில் இருக்கிறது.இத்தகைய விவரணையிலேய படம் எந்த அளவிற்கு நுணுக்கமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தனது வாழ்வில் கடந்து வந்த நிகழ்வுகளை அதே வலியுடன் பதிவு செய்து அந்த வலியை பார்ப்பவர்களுக்குள் கடத்துவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். ஒவ்வொரு காட்சியும், வசனமும் நம்மை குத்திக் கிழிக்கிறது. பிறப்பை வைத்து ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தில் ஒருவன் மேலே வர என்னென்ன அடக்குமுறைகளை அனுபவிக்க வேண்டியிருக்கிறது என்பதை காட்சிக்கு காட்சி…

Read More

சமீபத்தில் தமிழக கல்வித்துறையில் தோண்ட தோண்ட ஊழல் பூதங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. மோசடியில் ஈடுபட்டவர்கள் எல்லாம்  துணைவேந்தர் போன்ற உயர்பதவியில் இருப்பவர்களும் அனுபவமிக்க பேராசியர்களாகவும், பணியாளர்களாகவும் இருப்பதுதான் வேதனை அளிப்பதாக உள்ளது. கடந்த வருடத்தில் ஆசிரியப் பணியிடத்தை நிரப்புவதற்காக இலஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். அதற்குப் பிறகு அதே போன்ற மோசடிகள் பிற பல்கலைக்கழகங்களிலும் வெளிவந்தது. சில மாதங்களுக்கு முன்பு  யாரோ உயர் பதவியில் இருப்பவர்களுக்காக மாணவிகளை தவறான  நடத்தைக்கு வற்புறுத்திய பேராசிரியை நிர்மலாதேவி பற்றிய சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. தற்போது மேலும் மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் பூதாகரமாக கிளம்பி தமிழக கல்வித்துறையின் மானம் காற்றில் பறந்து கொண்டிருக்கின்றது. அண்ணா பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரி தேர்வு முடிவுகளை மறுமதிப்பீடு செய்வதில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற வைக்க…

Read More

இயற்கைக்குமாறாகஆண்-ஆண்,பெண்  பெண் இடையேயான உடல் ரீதியான தொடர்பு, விலங்குகள், குழந்தைகளுடன் புணர்வது போன்ற செயல்களை தண்டனைக்குரிய குற்றம் என்று வரையறுத்த அரசியல் சட்டப்பிரிவு 377 செல்லாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தனி மனித சுதந்திரம், சமத்துவம் இவற்றிற்கு எதிரான இந்த சட்டப்பிரிவு என்று தலைமை நீநிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில் கூறியுள்ளார். ஓரினச் சேர்க்கையினை தனி மனித சுதந்திரம் என்று வாய்கிழியக் கூறுபவர்களுக்கு இது ஒரு கேவலமான, மனிதத்தன்மைஅற்ற செயல்என்று ஏனோ புரியவில்லை. இதனை மிருகத்தனம் என்று கூறினால் அந்த ஐந்தறிவு ஜீவன்கள் கூட அவமானம் தாங்காமல் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டுவிடும். ஏனெனில் மிருகங்கள் கூட  ஒரே பாலினத்தில் உறவு வைத்துக்கொள்ளமாட்டா என்பதே நிதர்சனம்.! தன்னைத் தாண்டி சமூகத்தை பாதிக்காதவரையே தனி மனித சுதந்திரம். ஆனால் ஓரினச்சேர்க்கையால் இரண்டு தனி மனிதர்களைத் தாண்டி சுற்றியுள்ள பலரும் பாதிக்கப்படுகின்றனர் என்பதே உண்மை. இதற்கு பல்வேறு கல்லூரி…

Read More