Author: ஆர். அபுல்ஹசன்

இந்திய பொது சமூகத்தின் மனசாட்சி எப்போது விழிக்கும், எப்போது தூங்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்தபோது டெல்லியில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்திய அன்னா ஹசாரே கடந்த ஆறு வருடங்களாக எங்கிருக்கிறார் என்பதே தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாரே அதுபோலத்தான் இந்தியாவின் பொது சமூகமும் இருக்கிறது. மாட்டுக்காக பல உயிர்கள் பசுத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டபோது தூங்கிக் கொண்டிருந்தது. ரமளான் பண்டிகைக்காக புதுத் துணி வாங்கச் சென்ற ஜூனைத் என்ற சிறுவன் ஹரியானா ரயில் நிலையத்தில் வைத்துக் கொல்லப்பட்டபோது உறக்கம் களைத்து எழுந்து நாடு முழுவதும் NotInMyName போராட்டங்களை நடத்தியது. பிறகு மறுபடியும் உறங்கச் சென்றுவிட்டது. ஆனால் கொலைகள் நின்றபாடில்லை. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட போது உறங்கிக் கொண்டிருந்த பொதுச் சமூகத்தை தட்டியெழுப்ப ஜம்முவில் ஒரு எட்டு வயது சிறுமி தேவைப்பட்டாள். அவளது கொடூரமான படுகொலைக்கு பிறகு தற்காலிகமாக உறக்கம்…

Read More

மீடியா ஒன் ஏசியாநெட் செய்தித் தொலைக்காட்சிகளின் மீதான தடை பாதியிலேயே விலக்கிக் கொள்ளப்பட்டு, கிட்டத்தட்ட 14 மணி நேரத்திற்குப் பிறகு அவை தங்களது ஒளிபரப்பை மீண்டும் துவக்கி உள்ளன. நேற்று ஆங்கில இணையதளமான நியூஸ் மினிட்டில் இந்த தடைக்கான காரணங்கள் குறித்து தகவல் ஒளிபரப்புத் துறையின் நோட்டீசில் இடம்பெற்றிருக்கும் காரணங்கள் பற்றிய கட்டுரை படித்தேன். மீடியாஒன் தொலைக்காட்சிக்கு ஆர்எஸ்எஸ் பற்றி அதிகமான கேள்விகளையும், இந்த கலவரத்திற்கு ஆர்எஸ்எஸ்தான் காரணம் என்பது போன்ற செய்திகளை ஒளிபரப்பு செய்ததுதான் தடைக்கு காரணம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதோடு கலவரத்தின்போது பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் காட்சிகளை ஒளிபரப்பியதும் தடைக்கான காரணமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏசியாநெட் தொலைக்காட்சி, காவல்துறை இந்த கலவரத்தை கண்டும் காணாமல் இருந்து விட்டதாகவும், கலவரக்காரர்களுக்கு துணை போனதாகவும், இந்த செய்தியை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த அவர்களது நிருபர் கலவரக்காரர்களால் தடுக்கப்பட்டு அவரது மதத்தை பற்றி விசாரித்ததாகவும் செய்தி ஒளிபரப்பியதே தடைக்குக் காரணமாக…

Read More

எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது மாணவிகள், பெண் போராட்டக்காரர்கள் தங்கள் அந்தரங்க உடல் பாகங்களில் தாக்கப்பட்டு காயங்களுடன் எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது மாணவர்கள் தங்கள் முகங்களில் ஏதோ ரசாயனம் தெறிக்கப்பட்டு அரை மயக்கமடைந்து, இன்னும் மருத்துவமனைகளில் இருக்கிறார்கள் எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது என்ன ரசாயனம் என்று தெரியவில்லை, இன்னமும் எங்கள் அடிவயிற்றில் வலியை உணரமுடிகிறது, வெறுமனே அமர்ந்திருக்கும்போதும் கூட நாங்கள் களைத்திருக்கிறோம், கொசுக்களுடன் போராடிக் கொண்டிருப்பதால் களைத்திருப்போம் என்று எங்களில் சிலரது உள்மனம் சொல்கிறது ஆனால் எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது நான் இப்போது ஜாமியாவின் காற்றில் ஒரு வித்தியாசமான வாசனை பரவியிருப்பதை உணர்கிறேன் ஒன்றும் தவறாக நடக்கவில்லை, இது ஒரு ப்ரம்மை என்று எனக்குள் சொல்லிக் கொள்கிறேன் ஆனால் எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது தடுப்புகள் விலக்கப்பட்டுவிட்டன, சாலைகள் நகர்கின்றன, நாங்கள் ஏழாம் எண் வாசலுக்கு திரும்பிவிட்டோம் எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது காயமடைந்தவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்,…

Read More

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியில் கொத்து கொத்தாக வீசப்பட்ட பல ஆயிரம் கிலோக் கணக்கான குண்டுகள் இன்னும் வெடிக்காமல் மண்ணுக்குள் புதைந்திருக்கின்றன. பல நேரங்களில் அவை வெடித்து நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கின்றன. ஒவ்வொரு இரண்டு வாரத்திலும் ஒரு முறையாவது வெடிக்காத குண்டு கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்படுவதாகவும், வருடத்திற்கு குறைந்தபட்சம் 500 குண்டுகளாவது அப்படி கண்டெடுக்கப்படுவதாகவும் குண்டுகளை செயலிழக்கச் செய்யும் குழுவின் தலைவர் சொல்கிறார். புதிதாக ஏதேனும் கட்டுமானத்திற்காக அனுமதி பெறும்போது பூமிக்கடியில் வெடிக்காத குண்டுகள் எதுவும் இல்லை என்ற சான்றிதழ் பெற்ற பிறகே கட்டுமானத்திற்கான அனுமதி ஜெர்மனியில் வழங்கப்படுகிறது. அப்படி ஏதேனும் குண்டு கண்டெடுக்கப்படும்போது அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஒட்டுமொத்தமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்ட பிறகு அவை செயலிழக்கச் செய்யப்படுகிறது. ஜப்பானின் ஒகினாவாவிலும் இன்னும் பூமிக்கடியில் வெடிக்காத குண்டுகள் அதிகமாக புதைந்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன. ஜெர்மனி, ஜப்பான் மட்டுமல்லாது போரால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில் பூமிக்கடியில் வெடிக்காத குண்டுகள் எப்போது…

Read More

கேரளாவைச் சேர்ந்ந ஃபாத்திமா லத்தீஃப் சென்னை ஐ.ஐ.டியில் முதலாம் ஆண்டு மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் துறை மாணவியாக பயின்று வந்தார். தனது துறை ஆசிரியர்களின் உளவியல் தாக்குதலால் மனமுடைந்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தனது மொபைல் ஃபோனில் எழுதி வைத்த வெவ்வேறு குறிப்புகளில் தனது துறையைச் சார்ந்த மூன்று பேராசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு தான் இறந்தால் அதற்கு இவர்கள்தான் காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.அதிலும் குறிப்பாக சுதர்சன் பத்மநாபன் என்கிற பேராசியரை அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார். இதற்கு முன்பு அவருடனான உரையாடல்கள் மூலம் மதத்தை வைத்து ஆசிரியர்களால் நிந்தனைக்குள்ளாவதாக தனது குடும்பத்தினருக்கு தெரிவித்திருக்கிறார் ஃபாத்திமா. காவல்துறை அவரது மரணம் தொடர்பான தகவல்களை மறைக்க முயல்வதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். அவரது இரட்டை சகோதரி கேரள மாநில காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்த ஃபாத்திமாவின் குடும்பத்தினர் தங்கள் மகள் இறப்பிற்கு பாரபட்சமற்ற விசாரணை…

Read More

இஸ்ரேலை சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கி உலகம் முழுவதிலும் பரப்பி விட்டு உள்ள ஒரு ஒரு ஸ்பைவேர் அதாவது உளவு வைரஸ் தான் பெகாசஸ். இந்த வைரஸ் உட்புகுந்த அலைபேசிகள் முழுவதுமாக உளவாளிகளின் ஆளுகைக்கு கீழ் சென்றுவிடும். வாட்ஸ்அப் கால் மூலமாக இந்த வைரஸ் செல்போன்களில் பரவுகிறது. இந்த வைரசை உருவாக்கிய நிறுவனம் அரசாங்கங்களுக்கு மட்டுமே இந்த வைரசை விற்றிருப்பதாக தெரிவித்திருக்கின்றது. ஒருமுறை இந்த வைரஸ் உட்புகுந்தால் அந்த அலைபேசி முழுவதுமாக உளவாளிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுவதால் அதனை மீட்பதற்கு வேறு வழியே இல்லை என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். அந்த செல்போனை தூக்கி கடாசிவிட்டு வேறு புதிய செல்போன் வாங்கி அதில் முழுவதுமாக அப்டேட் செய்யப்பட்ட அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவது ஒன்றே வழி. உலகம் முழுவதிலும் ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட நபர்களின் செல்போன்களை தாக்கிய இந்த வைரஸ் இந்தியாவிலும் 12 க்கும் மேற்பட்ட நபர்களின் செல்போன்களை (தன)தாக்கியுள்ளது. வாட்ஸ்ஆப்…

Read More

கண்ணன் கோபிநாதன் – இந்த பெயரை எங்கேயோ கேட்டது போல் இருக்கிறதா..? சென்ற வருடம் கேரளா வெள்ளம் ஏற்பட்ட போது தனது அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர் தான் இந்த கண்ணன் கோபிநாதன். அப்போது இவர் மாவட்ட ஆட்சியராக இருந்தார். தற்போது ஏன் அவரைப்பற்றி பேசுகிறேன் என்றால் தனது குடிமைப் பணியை இவர் தற்போது இராஜினாமா செய்துள்ளார். அதற்கான காரணம், காஷ்மீரில் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதால் தனது மனசாட்சியின் உந்துதலின் படி இந்த ராஜினாமா முடிவை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். காஷ்மீரில் கடந்த ஒரு மாதமாக அடிப்படை உரிமைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும்,தனது ராஜினாமா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடாது, கிண்டல்களுக்கும், கேள்விகளுக்கும் உள்ளாகும் என்றாலும் மனசாட்சிக்கு நாம் பதிலளிக்க வேண்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் நஷ்டத்தில் இருந்த மின்சார துறையை தான் பதவியேற்ற…

Read More

அசாம் மாநிலத்திற்கான தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. 2018 ஜூலையில் வெளியிடப்பட்ட முதல் வரைவு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இரண்டு கோடியே 89 லட்சம் மக்கள் இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இறுதிப் பட்டியலில் 3 கோடியே 11 லட்சம் மக்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். 19 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் போதிய ஆவணங்கள் இல்லாததால் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாமல் அவர்கள் அந்நியர்கள் என்று அறிவிக்கப்பட இருக்கிறார்கள். பல பத்து வருடங்களாக இந்தியாவில் இந்திய குடிமகன்களாக வாழ்ந்து வந்த, வாழும் கிட்டதட்ட இருபது இலட்சம் இந்தியர்கள் இனி அந்நியர்களாக கருதப்பட்டு, கம்பிகளால் சூழப்பட்ட வெட்டவெளி மைதானங்களில் அகதிகளை விடவும் மோசமான வாழ்நிலைகளில், ஐநாவின் கணக்குப்படி உலகின் மிகப்பெரிய முள்கம்பி வேலி வசிப்பிடத்தில் அடைக்கப்பட இருக்கிறார்கள். 2018 ஜூலையில் வெளியிடப்பட்ட வரைவு பதிவேட்டிற்கும் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இறுதிப்பட்டியலுக்கும் இடையில் இருக்கும் இந்த முப்பது லட்சம் மக்கள் வேறுபாடு என்பது அந்தப்…

Read More

காந்தி கொல்லப்பட்ட போது நாட்டு மக்களுக்கு நேரு ஒரு அறிவிப்பு வெளியிட்டார். காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் அல்ல என்பதே அது. இப்போது அதே போன்றதொரு அறிவிப்பை கமல் செய்திருக்கிறார், காந்தியைக் கொன்றது ஒரு இந்து என்று. ஆனால் இரண்டிற்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. நேரு சொன்னது நாட்டுக்காக. கமல் சொல்லியிருப்பது ஓட்டுக்காக. நேரு முஸ்லிம்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சொன்னார். கமல் முஸ்லிம்களை ஏமாற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. ஒரு மனித உயிரைக் கொல்வதற்கு எந்த மதமும் போதிப்பதில்லை. மதத்தைக் காப்பாற்ற, மதத்தைப் பின்பற்றுபவர்களைக் காப்பாற்ற, மதத்தின் பெயரால் என யார் தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்டாலும் அவர்கள் அந்த மதத்தின் எந்த அடிப்படையிலும் இல்லை என்பதே நிதர்சனம். அப்படியிருக்கையில் காந்தியைக் கொன்ற கோட்சேவை இந்து என்று விளித்திருப்பது நிச்சயம் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்பதுடன் கடுமையான கண்டனத்திற்கும் உரியது. ஆனால் அதே நேரத்தில் கமல்…

Read More

மத்திய அரசின் முத்தலாக் மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருந்தாலும் ஒரு நல்ல காரியத்தை நிகழ்த்தியிருக்கிறது. அந்த மசோதாவை ஆதரித்தும் எதிர்த்தும் பேசுவதற்காக பல எம்பிக்களை குர்ஆனை படிக்க, புரிந்துகொள்ள வைத்திருக்கிறது இந்த மசோதா. நேற்று மக்களவையில் இந்த மசோதாவை எதிர்த்து பேசிய காங்கிரஸ் எம்பி ராஜ்நீத் ரஞ்சன் இப்படி கூறுகிறார் : குர்ஆனை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்,  ஏனென்றால் விவாகரத்து குறித்த குர்ஆனின் கொள்கைகள் மிகவும் சிறப்பானவையாக இருக்கின்றன. அரசு அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு மசோதாவை  கடுமையாக எதிர்த்ததுடன், இந்த மசோதா மூலம் குர்ஆனையும், குர்ஆன்  கூறும் விவாகரத்து கொள்கைகளையும் விரிவாக படிக்க நேர்ந்தது. குர்ஆனின் விவாகரத்து கொள்கையே உலகின் சிறந்த சட்டம் என்று கூறினார். அவரது முழு உரை : இந்த மசோதா மூலம் குர்ஆனை படித்து புரிந்து கொள்ள உதவியதற்காக மத்திய அரசுக்கு நன்றிகள். குர்ஆனில் இடம்பெற்றிருக்கும் விவாகரத்து குறித்த விரிவான சட்டத்திற்காக…

Read More