(செங்கோட்டையில் முஸ்லிம் வீடுகள் மீது கல்லெறிந்த பதின்ம வயது சகோதரனுக்கு ஒரு கடிதம்)
கையில் கற்களோடு நிற்கும் என் கலவரக்கார சகோதரனுக்கு.
உன் கையில் கல்லை திணித்தவன் யார் தெரியுமா?
அவன், உனக்கு கல்வி தர மறுத்தவன்,
நீ பெற்ற இடஒதுக்கீடுகளை ரத்து செய்ய துடிப்பவன்,
உன் உழைப்பை சுரண்டிக் கொழுத்தவன்,
சமநீதியை மறுத்து மனுநீதியை நிலைநாட்ட விரும்புபவன்,
சாதி இழிவை உன் மீது திணிப்பவன்,
உன்னை என்றென்றும் அடிமையாக வைத்திட நினைப்பவன்,
என் சகோதரனே
நான் உன் கைகளில் உள்ள கல்லை பிடுங்கிக் கொண்டு கல்வியை வழங்க விரும்புகிறேன்,
கலவரக்காரனான உன்னை கல்வியாளராக பார்க்க ஆசைப்படுகிறேன்
உன் கையில் உள்ள கல்லை என் மீது வீசி எறி, உன் கோபம் தணியட்டும்
கல் ஏற்படுத்தும் காயம் சில நாட்களில் ஆறிவிடும்,ஆனால் கல்லாமையும், சாதிய இழிவும் வாழ்நாள் முழுவதும் உன்னை காயப் படுத்திக் கொண்டே இருக்கும்
உன் கையில் கல்லை தந்த அந்த ஒரு சதவீதத்தவன் தனது கைகளில் இந்த தேசத்தின் 73% வளங்களை வைத்துள்ளான்
மத, சாதிய கலவரமும், வன்முறையும் அதைத் தொடர்ந்து நடைபெறும் கைதுகளும் நமது பொருளாதாரத்தை அழித்துவிடும்
நீ உன் கைகளால் கற்களை தூக்கமல் புத்தகத்தை தூக்கிப் பார்
உனது உண்மையான எதிரி யார் என்று தெரியும்
இதற்கு ரோஹித் வெமுலாவும், முத்து கிருஷ்ணனும் சாட்சி
எழுதியவர் – நாசர் அஸத்