முஸ்லிம் நபரின் மீது ‘லவ் ஜிஹாத்’ குற்றம் சுமத்துவதற்காக வேண்டியே தான் ‘பணியமர்த்தப்பட்டதாக’ ஒரு பெண் கூறியதை அடுத்து பிஜேபி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்திரபிரதேசத்தின் காஸ்கஞ் பகுதியில் ஒரு முஸ்லிம் நபரை லவ் ஜிஹாத் மற்றும் பலாத்கார வழக்கில் சிக்க வைப்பதற்காக தான் வேலைக்கு பணியமர்த்தப்பட்டதாக டெல்லி சார்ந்த பெண் குற்றம் சாட்டியதை அடுத்து பிஜேபி தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமன் சௌகன் மற்றும் ஆகாஷ் சேலங்கி ஆகிய இருவரும் தற்போது இடைக்கால ஜாமீனில் வெளியே உள்ளனர்.
குற்றவாளிகளில் ஒருவரான சவ்கான் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியின் மாவட்ட துணைத் தலைவர் ஆவார்.
அந்தப் பெண் 24 வயதான ராதா என அடையாளம் காணப்பட்டுள்ளார். ராதா முன்னர் பிரின்ஸ் குரேசி எனும் முஸ்லிம் நபர் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்து தன்னை பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார். மேலும் அவர் தன்னை ஒரு இந்துவாக காட்டி கொண்டதாகவும் கூறியுள்ளார், (டைம்ஸ் ஆப் இந்தியா அளித்த அறிக்கை).
ஜூலை 16 அன்று குரேஷியின் மீது 376 பலாத்காரம் 323 வேண்டுமென்றே காயப்படுத்துவது 506 குற்றவியல் மிரட்டல் ஆகிய இந்தியன் பேனல் கோட் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர் அந்த வழக்கை வாபஸ் பெற்ற ராதா சௌகான் மற்றும் சுலங்கி ஆகிய இருவரும் தான் தன்னை அவ்வாறு செய்வதற்காக பணி அமர்த்தியதாக கூறியுள்ளார்
ராதாவின் வாக்குமூலம் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 164ன் மூலம் மேஜிஸ்ட்ரேட் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழில் – ஹபீப்
Source : https://maktoobmedia.com/2022/07/25/bjp-leader-arrested-after-woman-says-she-was-hired-to-accuse-muslim-man-of-love-jihad/