சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2022-24 கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு முடிவுகள் வெளிவந்து மூன்று மாதங்களாகியும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Certificate) வழங்கப்படாமல் உள்ளது.
சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள TNPSC மற்றும் பிற அரசுத் தேர்வுகளை எழுத தகுதிப்பெற்று இருந்தும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாததால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சான்றிதழ்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள இந்த தாமதம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அலட்சியத்தை வெளிக்காட்டுகிறது. எனவே மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 2022-24ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை விரைந்து வழங்க SIO கோரிக்கை விடுக்கிறது.