பாஜக அரசானது தன்னை மிகவும் வலிமையான சக்தியாக, யாராலும் தகர்க்க முடியாத சக்தியாக மக்களின் மனதில் நிறுவ முயல்கிறது. எனவேதான் தன்னை எதிர்த்து கேள்வி கேட்கும், எதிர்த்து நிற்கும் சமூகச் செயற்பாட்டாளர்களையும் களப்போராளிகளையும் அச்சுறுத்தி எதிரிகளே இல்லாமல் ஆக்குவதற்கான அனைத்து வேலைகளையும் பாசிஸ மோடி அரசு செய்கிறது. அதனுடைய தொடர்ச்சியாகவே சமூகப் போராளியும் மத்தியப் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தலைவருமான அஃப்ரீன் ஃபாத்திமா அவர்களின் வீடு சட்டத்திற்குப் புறம்பான முறையில் இடிக்கப்பட்டுள்ளது.
இது இன்று நேற்று நடக்கின்ற நிகழ்வு அல்ல. பாசிசம் எல்லாக் காலத்திலும் தனது எதிரிகளைக் கண்டு அஞ்சியே வந்துள்ளது. அதன் காரணமாகவே சட்டத்திற்குப் புறம்பான வழியில் அவர்களின் மீது பொய்க் குற்றங்களை சுமத்தியும், கைது செய்தும், வாழ்க்கை வளங்களை அழித்தும் வந்துள்ளது.
ஏனெனில் இந்த பாசிஸவாதிகள் நேரிடையாக கொள்கையிடனோ, சித்தாந்தத்துடனோ அல்லது நேர்மையான முறையில் சட்ட ரீதியாகவோ போராட வக்கற்ற முதுகெலும்பற்ற நபர்களாகவே இருந்து வந்துள்ளார்கள்.
ஒருவரின் வீடு என்பது வெறுமனே மண்ணாலும் கல்லாலும் கட்டப்படுவது கிடையாது. குறிப்பாக இருபது ஆண்டுகள் ஒரு வீட்டில் வசிப்பவர்கள் அந்த வீட்டை உணர்வாக, கனவுலகமாக, தனது வாரிசுகளுக்கான அடைக்கலமாக, தனது அடையாளமாகவே கருதுவார்கள். அத்தகைய உணர்வையும் கனவையும் சுமந்த வீட்டைதான் ஜனநாயகத்திற்கு புறம்பான வழியில் இடித்து தள்ளியுள்ளது பாசிஸ பாஜக அரசு. தன்னை எதிர்ப்பவர்களுடன் நேரடியாக, சட்ட ரீதியாக, ஜனநாயக ரீதியாகப் போராட முதுகெலும்பில்லாத நபர்களிடமிருந்து இத்தகைய எதிர்வினைதான் வெளிப்படும்.
கடந்த எட்டு வருடங்களாக எவ்வளவோ பிரச்னைகள், போராட்டங்கள், கலவரங்கள் நடந்தபோதும் அதனைக் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் நபிகளாரைக் குறித்து நுபுர் சர்மா அவதூறுப் பேசியதற்கு அரபு நாடுகள் கண்டித்த சில மணித்துளிகளிலேயே வெளிப்படையான மன்னிப்பும் கேட்டார்.
பாசிஸத்திற்கும் பாசிஸவாதிகளுக்கும் நேர்மையான முறையில் போராடவோ, போராட்டக்காரர்களை எதிர்த்து நிற்பதற்கான திராணியோ ஒரு போதும் இருந்ததில்லை என்பது வரலாற்று உண்மை. வரலாற்று உண்மை இனியும் மாறாப்போவதில்லை.
எக்காலத்திலும் பாசிஸவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து போராளிகள், புரட்சியாளர்கள் தங்களது பாதைகளை மாற்றிக்கொண்டது கிடையாது. பொதுமனம்
அஃப்ரீன் ஃபாத்திமாவுடன் துணை நிற்ப.தன் மூலம் மட்டுமே வரலாற்று உண்மைக்கு சான்று பகரமுடியும்
- சகோதரன்