படத்த படமா எந்த ஆங்கில்ல வௌவால் மாதிரி தொங்கி பாத்தாலும் படமா கூட தெரியாத அளவுக்கு ஒரு குப்பை. விஜய் பண்ற ஸ்டண்ட்ஸ்லாம் பாலய்யா படத்துல வர்ற மாதிரியான ஒரு பீல். விஜய்யும் ஒன்னும் அவ்ளோ கியூட்டாலாம் இல்ல ஹீரோயின் வழக்கமான ஹீரோயின், காமெடி கொஞ்சம்னு என்னத்தையோ ஸ்க்ரிப்ட்னு எழுதி வச்சிருக்கான்.. எனக்கு என்ன ஒரு விஷயம் புரியலனா இத ஒரு ஸ்க்ரிப்ட்னு நெல்சன் சொல்லி விஜய் ஓகே பண்ணிருக்கான்னா விஜய்யோட சினிமா அறிவை நாம முழுக்க சந்தேகப்பட வேண்டிய எடத்துல தான் இருக்கோம்.
புரியாத இன்னொரு விஷயம் இந்த படத்துக்கு எதுக்கு தீவிரவாத கான்செப்ட்னு தான்.. இசுலாமிய வெறுப்புன்றது ரொம்ப அரத பழைய கான்செப்ட் அது சினிமாவுக்கு வேணா இருக்கலாம் ஆனா இன்னிக்கி வாடகைக்கு வீடு பாக்குறதுல இருந்து வேலைக்கு சேருற வரை ஒரு சாதாரண இசுலாமியர்கள் எத்தனை இன்னல்களை மறைமுகமா அனுபவிக்கிறது ஒரு பக்கம் இருக்க நேரடியாவே இன்னிக்கி இந்துத்துவா சக்திகள் அவங்களுக்கு அச்சுறுத்தலை கொடுக்குறாங்கன்றது ரெண்டு நாளைக்கு முன்ன வரைக்கும் செய்தி
ஆனா இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இல்லாததையா காட்டுறாங்க, தீவிரவாதிகள் அவங்க தான, இசுலாமிய வெறுப்புனு ஒன்னு இல்ல, ஒரு இந்துவா இந்துக்களை விமர்சிச்சா எங்களுக்கு வலிக்கல அவங்க மட்டும் ஏன் சீரியஸா எடுத்துக்கனும்ன்ற மாதிரியான சால்ஜாப்புகல இசுலாமியர்களா இருந்து அனுபவிசாத்தான் தெரியும்.இந்துத்துத்வாக்கு அடிப்படை சக்தியே இந்த மாதிரியான இசுலாமிய வெறுப்பு தான் அதை விதைக்கிறதன் மூலமா தான் இன்னிக்கி அவன் நெனச்சத சாதிச்சிட்ருக்கான். நீங்க எல்லா வகையிலும் ஒரு கம்பர்ட்டான வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இதுல என்ன offend ஆகுறதுக்குனு கேக்குறத விட ஒரு பெரிய அறிவற்றத்தனம் வேற கிடையாது.
வடசென்னைகாரங்கனா ரவுடி, தலித்துனா ரவுடி, முஸ்லீம்னா தீவிரவாதின்னு தமிழ் சினிமா காலம்காலமா பதிய வச்சதோட விளைவு வெறும் 200,300 ரூவா காசு கொடுத்து படத்த படமா பாக்குறவங்களுக்கு புரியாது. விஜய் பேன் ஒருத்தர் படத்துக்கு ரிவியு சொல்ற வீடியோ ஒன்னு பாத்தேன் விஜய் கொஞ்சம் பொறுப்போட செயல்படனும்னு சொல்ற அந்த மனுஷன்க்கு தெரியுது இதெல்லாம் எப்டி சமூகத்துல அதிர்வை ஏற்படுத்தும்னு.
அது போக படத்தோட ஆரம்பத்துல விஜய் சந்திக்குற மனநல மருத்துவர் பண்ற காமெடிய பத்தி என்ன சொல்ல.. ஏற்கனவே பேஸ்புக்ல பேசண்டுகள ஒரு அடிமையாட்டும் கண்டென்ட்டு குடுக்கவே ஹாஸ்பிட்டல் வந்தவனுகளாட்டும் ட்ரீட் பண்றானுக இதுல இவனுக வேற ஏத்தி விடுறானுக. நெல்சனோட கரியர்க்கு வேணா இந்த மாதிரி கதைகள் ஹெல்ப் பண்ணலாம் இல்ல அவனுக்கு இதுக்கு பின்னாடி நடக்குற நடைமுறை அரசியல் தெரியாம இருக்கலாம்.. ஆனா சினிமால விஜய் எப்டி ஜோசப் விஜய் ஆனாருன்னு அவரும் மறந்திருக்க மாட்டாருனு நம்புவோம்..
V. ஜகதீஸ் – எழுத்தாளர்