பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகளை குறித்து உச்சநீதிமன்றம் வழக்காக எடுத்துக் கொண்டுஒன்றிய மாநில அரசுகளுக்கும் பஞ்சாப் ஹரியானா நீதிமன்றங்களுக்கும் சில
உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மேற்படி பயணத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் விஷயத்தில்
பல்வேறு கருத்து முரண்பாடுகள் உருவாகி உள்ளது. பஞ்சாப் மாநில அரசின் தவறு என்று
ஒன்றிய அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும் வழக்கமாகச் செய்யும் தேர்தல்
நாடகம் என பஞ்சாப் மாநில அரசும் பிற எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஜாப் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் இவ்விஷயத்தை தங்களுக்கு
சாதகமாக மாற்றி பிரச்சாரம் செய்வதற்காக பாஜக முதலில் முனைப்பு காட்டியது. ஒன்றிய
அரசும்பஞ்சாப் மாநில அரசும் தனித்தனியாக விசாரணைக்கு உத்தரவிட்டார்கள். அவ்விசாரணைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பிரதமர் இரண்டு மணி நேரம் சாலை வழியாக பயணம் செய்வதற்கு முடிவு எடுத்தது யார்?, அதற்கு என்ன காரணங்கள்?, ஹெலிகாப்டர் பயன்படுத்த வேண்டாம் என இறுதி நிமிடத்தில் முடிவு எடுக்க என்ன காரணம்?, பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவின், மாநில காவல் துறையின் தீர்மானங்களில், ஒருங்கிணைப்பில் என்னென்ன தவறுகள் உருவானது?… என்பன போன்ற விஷயங்களில் விசாரணை மேற்கொள்ளப்படும். சுருக்கமாக சொல்வதென்றால், நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு கோளாறுகளை மிகவும் முக்கியமான ஒன்றாக நாடு கருதுகிறது என்று பொருள். நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கையில் வைத்திருப்பவருக்கு இந்த முக்கியத்துவம் தரப்பட வேண்டியது நியாயமான ஒன்றுதான். இதில் நாட்டின் பாதுகாப்பும் உட்படும். அதனால் தான் ஒரே ஒரு நபரின்பாதுகாப்பிற்கு நாடு வருடத்திற்கு 600 கோடி ரூபாயை செலவிடுகிறது. மூவாயிரத்திற்கும் அதிகமான பாதுகாவலர்களும் அவருக்கு உண்டு. இதற்கு ஒரு மறுபக்கமும் உண்டு. பிரதமரின் பாதுகாப்பிற்கு இவ்வளவு கவனமும் பணமும் நாடு செலவழிப்பதன் காரணம் என்னவென்றால்,நாட்டின்.. நாட்டு மக்களின் பாதுகாப்பு அவரது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதால்தான். அமைப்புச்சட்டமும் பொறுப்பேற்றுள்ளது நடத்தக்கூடிய உறுதிமொழியும் பிரதமர் மீது மிகப்பெரிய பொறுப்பை சுமத்துகிறது. குடிமக்களின் நலனும் பாதுகாப்பும் உறுதி செய்வது என்பது அவர் மீது சட்டப்பூர்வமான கடமையாகும்.
இதனால்தான் பஞ்சாப் நிகழ்வின் ஊடாக நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்தும் நாம் அலச
வேண்டியுள்ளது. நாட்டு மக்களுக்கு பாதுகாப்பும் அச்சமற்ற சூழலும் அளிப்பதில்
பிரதமர் நரேந்திரமோடியின் செயல்பாடுகள் வரலாறு சிறிதும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை. இறுதியாக நடந்த இரண்டு சம்பவங்கள் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். பஞ்சாபின் பாலத்தில் 20 நிமிடங்கள் சிக்கித்தவித்த மோடி தன்னுடைய எதிர்ப்பை இவ்வாறு பதிவு செய்தார். “என்னை உயிரோடு அனுப்பியதற்கு நன்றி”என்று குற்றம் சாட்டி குறிப்பு அனுப்பினார். ஆனால், இதற்கு சற்று முன்பாக நாட்டில் குடிமக்களின் உயிருக்கும் தன் மானத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய இரண்டு நிகழ்வுகள் நடந்தன. ஒன்று,ஹரித்துவாரில் உயர்ந்த இனப்படுகொலைக்கான அழைப்பும் டெல்லியில் இனப்படுகொலைக்கு ஊக்குவிக்கக் கூடிய உறுதிமொழி ஏற்பும்.இப்படிப்பட்ட ஆபத்தான செயல்பாடுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு உண்டு. குடிமக்களுக்கு அச்சமற்ற உணர்வை அளிப்பதும் அக்கிரமக்காரர்களுக்கு எதிராக நிலைபாடு எடுப்பதும் அவர் செய்திருக்க வேண்டிய
ஒன்று. ஆனால் அவர் ஆபத்தான மௌனத்தை கடைபிடித்தார். அந்த மௌனம் மக்களின்
பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றாகவும் அக்கிரமக்காரர்களுக்கு ஊக்கம் அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என பலர் சுட்டிக் காட்டிய பின்பும் மோடி மௌனத்தை தொடர்கிறார். இனவெறியின் ஏழைகளுக்கு பாதுகாப்பு தேவையில்லை என்ற அவரது முடிவைத்தான் இது எதிரொலிக்கிறது. இனப்படுகொலை தாக்குதல்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டதிற்கு எதிராக அவர் சொல்லும் ஒரு வார்த்தைக்கு மிகப் பெரிய பலன் உருவாகியிருக்கும்.
சமீப காலத்தில் நடைபெற்ற இரண்டாவது நிகழ்வு ‘புள்ளி பாய்‘ என்ற மோசமான ஆப்பின்
வழியாக பரப்பப்பட்ட பெண் விரோத பதிவுகள்தான். இந்நிகழ்விலும் குற்றவாளிகளாக இருப்பது மோடியின் கட்சியுடன் இணைந்து செயல்படுபவர்கள்தான். ஆகவே, அதனால் பாதிப்புகளுக்கு ஆளான இரைகளுக்கு ஆறுதலையும் நீதியையும் அளிக்கவேண்டிய அதிகமான பொறுப்பு மோடிக்கு உள்ளது. அவர் வேண்டுமென்றே மௌனத்தை கடைபிடித்தார். இந்த இரண்டு விஷயங்களிலும் ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனமாய் கடந்து சென்ற மோடி தன் சுய பாதுகாப்பின் விஷயத்தில் தன்னைப் பஞ்சாப் அரசு பலிகொடுக்க\ முனைந்தது போல் பம்மாத்து காட்டுகிறார். இது ஒரு நல்ல தலைவனுக்கு உண்டான பண்பல்ல. அடையாளமல்ல.
இனவெறி தாக்குதல்களுக்கு எண்ணெய் ஊற்றக்கூடிய பல அறிக்கைகள் பிரதமரிடமிருந்து பலமுறை வெளியானதுண்டு. நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் மோடியின் செய்திகள் நாட்டின், நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு எந்த அளவு உந்து சக்தியாக,உறுதுணையாக
இருந்தது எனவெளிப்படையாக ஒரு ஆய்வு செய்தால் கிடைக்கும் முடிவுகள் அவருக்கு
எதிரானதாகதான் இருக்கும். காஷ்மீரில் மக்களுக்கான பாதுகாப்பு என்று ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம்தான். குடியுரிமைசட்டத் திருத்தம் என்றப் பெயரில் இலட்சக்கணக்கான மக்களிடத்தில் பாதுகாப்பற்ற உணர்வையும் பயத்தையும் பரப்பினார்கள்.
ஆலோசனை இல்லாமல் நடைமுறைப்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை அலங்கோலமாக்கியது. நாட்டின் பொருளாதார பாதுகாப்பை ஆபத்தில் சிக்க வைத்தது. இனியும்அதிகமாக சொல்ல வேண்டியதில்லை. நாட்டிலுள்ள சாதாரண மக்களிடத்தில் சிறுபான்மை சமூகத்தில் இந்தளவு அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் உருவாக்கிய ஒரு ஆட்சியும் காலகட்டமும் இந்தியாவில் இருந்ததில்லை. சுய பாதுகாப்பு குறித்து இந்தளவு கவலையை வெளியிடும் மோடி, அதில் கொஞ்சமாவது நாட்டு மக்களின் பாதுகாப்பை குறித்து சிந்திப்பது நல்லது. பஞ்சாப் நிகழ்வில் பிரதமரின் பாதுகாப்பு பெரிய விவாதத்தை உருவாக்கியது.அதற்கு இடையே அப்பாவிகளான நாட்டு மக்களின் பாதுகாப்புகுறித்தும் கொஞ்சம் விவாதம் செய்வது நன்றாக இருக்கும்.அவர்களதுபாதுகாப்பை உறுதி செய்வதும்.
K.S அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்