ஆதிக்க சக்திகளும், உயர்சமூக்ததினரும் இந்தியாவை தன் பிடியில் அழுத்தி, வர்கவேருபாடுகளை உச்சத்தில் வைத்திருந்த காலத்தில்! இஸ்லாமியர்கள் நவீன கல்வியை விட்டு வெகு தூரம் இருந்தக் காலத்தில்! ஃபாத்திமா ஷேக் எனும் ஓர் சூரியன் உதித்தது, அந்த ஒளியில் மதம், இனம், சமூகம் கடந்து பல பெண்களின் வாழ்வு பிரகாசித்தது.
நவீன இந்தியாவின் இரண்டாம் பெண் ஆசிரியரும், நவீன இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் ஆசிரியருமான ஃபாத்திமா ஷேக் 1831 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திங்கள் மகாராஷ்டிராவில் உள்ள பூனே வில் பிறந்தார். இவர் வளர்ந்து வந்த அதேக் காலக்கட்டத்தில் மற்றொரு புரட்சியாளரும் வளர்ந்து வந்தார் அவர்தான் சாவித்திரி பாய் பூலே. இவர்கள் இருவரின் வாழ்வும், பணிகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது.
இவர்கள் இருவரும் அமெரிக்க மிஷனரியான சிந்தியா ஃபாரரால் நடத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதல் முறையாக சந்தித்தனர் அங்கிருந்தே இவர்களின் நட்பு துவங்கியது. இந்திய வரலாற்றின் மிக முக்கியமான சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவரான ஜோதிபா பூலேவுக்கும் சாவித்திரிபாய்க்கும் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் பிற்படுத்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்கான கருவியாக கல்வியை கருதி. பலதரப்பட்ட மக்களிடம் கல்வியை கொண்டு சேர்க்கும் பணிகளைத்துவங்கினர்.
அவர்களின் பணிகளைக்கற்கண்டு ஆத்திரமடைந்த ஜோதிபா பூலேவின் தந்தை அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினார். இருவரும் இருக்க இடமின்றி தவிப்பதை அறிந்த ஃபாத்திமா ஷேக், ஜோதிபா தம்பதியை அழைத்து வர தன் சகோதரர் மியா உஸ்மான் ஷேக்கை அனுப்பிவைத்தார். உஸ்மான் ஷேக்கின் வேண்டுக்கோளை ஜோதிபா பூலே ஏற்றுக் கொள்ளாததால், ஃபாத்திமா ஷேக் நேரில் வந்து ஜோதிபா தம்பதியை தம் வீட்டில் தங்குமாரு கட்டாயப்படுத்தினார். அவரின் கட்டாயத்திர்கிணங்க இருவரும் அவரது வீட்டில் தங்கினர். அந்த வீட்டில், தான் நவீன இந்தியாவின் முதல் பெண் பள்ளிக்கூடம் துவங்கப்பட்டது.
ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே ஆகியோர் ஃபாத்திமா ஷேக்குடன் சேர்ந்து பல்வேறு சமூக மக்களிடையே கல்வியை பரப்பும் பொறுப்பை ஏற்றனர். சாவித்திரிபாய் பூலேவும், ஃபாத்திமா ஷேகக்கும் வீதி வீதியாகச் சென்று அனைத்து சமூக மக்களையும் கல்வியின் பக்கம் அழைத்தனர், இதன் விளைவாக ஆதிக்க சக்திகளின் எதிர்ப்புகள் அவர்களின் மீது பெரும் மலைகளாக விழுந்தன. எல்லாவிதமான எதிர்ப்புகளையும் தாங்கிக்கொண்டு. சாவித்திரிபாய் பூலேவும் ஃபாத்திமா ஷேக்கும் தோளொடு தோள் நின்று ஆதிக்க சமூகத்தை எதிர்கொண்டனர்.
1848ஆம் ஆண்டு பூனேவில் உள்ள பிதேவாடா எனும் பகுதியில் இம் மூவரும் இணைந்து நவீன இந்தியாவின் முதல் சமூக, இனப்பேதமற்ற பள்ளியை உருவாக்கினர். அப் பள்ளியில் பாடம் கற்பித்த முதல் ஆசிரியர் ஃபாத்திமா ஷேக் அவர்கள். ஜோதிபா பூலேவால் உருவாக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் ஃபாத்திமா ஷேக் பாடம் கற்பித்தார்.
சமூகச் சீர்திருத்தவாதியாக இருந்து, பெண் கல்விக்காக பெரிதும் பாடுப்பட்டு, நவீன இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்களுள் ஒருவரான ஃபாத்திமா ஷேக் என்னும் பெண், இந்தியாவில் வாழ்ந்தார் என்பதும் கூட நம்மில் பலருக்கு தெரியாது. ஃபாத்திமா ஷேக்கின் வரலாறு ஆவணப்படுத்தப் படவில்லை. ஃபாத்திமா ஷேக் பிறந்ததாகக் கூறப்படும் ஜனவரி 9 ஆம் நாளில் கூட பல்வேறு கருத்துவேறுபாடுகள் உள்ளன.
வரலாற்றுப் பக்கங்களில் ஃபாத்திமா ஷேக்க்கின் தியாகங்கள் ஓரவஞ்சனையாக ஓரம் தள்ளப்படுள்ளன. வாழ்க்கை முழுக்க போராடிக்களித்த ஃபாத்திமா ஷேக் இன்றுவரையிலும் வரலாற்றில் தன் உரிமைகளைப் பெற போராடிக் கொண்டுள்ளார்!. முற்கால இஸ்லாமியர்களின் வரலாற்றை மறைப்பதும், இக்கால இஸ்லாமியர்களின் குரல்களை நசுக்குவதும் ஆதிக்க சக்திகள் செய்யும் மிக முக்கியமான செயலாகும். இஸ்லாமியர்களின் பல்வேறு வரலாறுகள் திட்டமிட்டு மாற்றப்பட்டும் மறைக்கப்பட்டும் இருக்கிறது! சகோதரி சபரிமாலா போன்ற சமூக செயற்பாட்டாளர்கள் முஸ்லிம் பெண்களின் கல்வி மற்றும் கல்வி முறைக்கு ஆதரவு தெரிவித்தால் அவர்கள் திட்டமிட்டு பழமைவாதிகள் போன்ற பல கோணங்களில் விமர்சிக்கப்படுகின்றனர்.
இஸ்லாமிய வெறுப்பின் உச்சமாக “சுல்லி டில்ஸ்” “புல்லி பாய்” போன்ற செயலிகளை உருவாக்கி அதன் மூலம் இஸ்லாமிய செயல்பாடாளர்களின் குரல்வளையை நசுக்கும் பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது! நமக்கு வரலாறு சான்றளிக்கிரது இறை நம்பிக்கையாளர்கள் இதற்கெல்லாம் அஞ்சி முடங்கிடுவிபவர்களல்ல. ஆதிக்க சக்திகள் 100 வரலாறுகளை மறைத்தால் நாம் 1000 வரலாறுகளை தோண்டி எடுக்க வேண்டும்! ஆதிக்க சக்திகள் 1000 பெண்களை கேவலப்படுத்தி முடக்க நினைத்தால், இலட்சம் பெண்களின் குரல் மேலோங்க வேண்டும்!
ஆதிக்க சக்திகள் இலட்சம் சூழ்ச்சிகள் செய்தால் நாம்
“நீதி” என்னும் ஒரே நிலைப்பாட்டில் நிலைத்திருக்க வேண்டும்.
சையத் ஷகீல் அஹ்மத் – எழுத்தாளர்