அந்த மலைகளில் மேய்ந்து கொண்டு இருக்கும் ஆட்டு குட்டிக்கு ஏதாவது நேர்ந்தால் கூட என் இறைவனிடம் நான் பதில் கூற வேண்டும் என்று அரேபியவை ஆட்சி செய்த கலிபா உமர் ரலி அவர்கள் கூறினார்கள், அதுபோல இன்று பொறுப்பாளியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இங்கு உள்ள காடுகள், நீர்நிலைகள்,காற்று,மண்வளங்கள்,வனவிலங்குகள் என எல்லாவற்றுக்குமான பொறுப்பாளியாக தான் ஒரு தலைவன் தேர்தெடுக்கப்படுகிறார் ஆனால் தற்போது இருக்க கூடிய தலைமை என்பது வெறும் மனிதன் மனிதன் மனிதன் என்று சுழல கூடிய ஒன்றாக மாறிவிட்டது.dha
இந்த பூமி பந்தானது வெறும் மனிதன் மட்டுமே சொந்தம் கொண்டாட கூடிய ஒன்று இல்லை இங்கே இருக்கும் சிறு அனில் முதல் பெரிய யானை வரை இங்கு வசிக்கும் உரிமை உடையது தான், மனிதனுக்கு பெரிய அளவு உரிமையும் அனில் போன்ற ஜீவராசிகளுக்கு சிறிய அளவு உரிமையும் என்ற பாகுபாடு கிடையாது இயற்கை தராசில் அனைத்தும் உயிரினங்களே, இந்த பூமியில் வசிக்கும் உயிரினங்கள் அனைத்துமே ஒன்றை ஒன்று சார்ந்து தான் வாழக்கூடியவை ஒரு சிறு புற்கள் மேகத்திலிருந்து வரும் நீரை எதிர்பார்க்கிறது பெரிய யானை இந்த புற்களை உணவாக உட்கொள்கின்றது யானையின் சாணம் மரங்களை உருவாக்குகிறது அதில் விளையும் பழங்கள் மற்ற விலங்குகளுக்கு உணவாக, மூலிகையாக மாறுகிறது இப்படியே இந்த சுழற்சி முறை பூமி சுழல்வது போல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது ஆனால் மனிதன் தான் தேவைக்கு அதிகமாக இயற்கையை லாப நோக்குடன் சுரண்டுகிறாதால் இயற்கையை மட்டுமே நம்பி தனது உணவு, இருப்பிடத்தை அமைத்து கொள்ளும் விலங்குகளின் வாழ்க்கை, உயிர் ஆபத்தில் தள்ள படுகிறது
இங்கு எந்த உயிரினமும் வீணாக படைக்க படவில்லை அதற்கு அதற்கான வேலைகள் உள்ளன அதனை அறிவியல் முறைப்படி சங்கிலி தெடர் என்று கூறுவார்கள் இதனால் விவசாயிகளின் உற்றதோழனாக மண்புழு மாற முடியும், காடுகளின் காப்பாளனாக புலிகள் மாற முடியும்,காடுகளை விவசாயம் செய்ய யானைகளினால் முடியும் என்ற கட்டமைப்பே இங்கு செயல்பட்டுவருகிறது ஆனால் இந்த கட்டமைப்பு ஒரு சிலரின் பேராசையினால், பலரின் அலட்சியத்தால் சிதைவடைகிறது,புலி மனிதனுக்கு அச்சுறுத்தல் என்று அதனை பிடித்து கூண்டில் போடுகிறார்கள் ஆனால் அடுத்த சில காலங்களில் அந்த புலி இருந்த வனபகுதியை பெரிய கார்பரேட் கம்பெனிக்கு தாரை வார்த்துக் கெடுக்க படுகிறது அங்கு இருந்த மக்கள் அப்புறப்படுத்த படுகிறார்கள் அப்போது அந்த புலி யாருக்காக பிடித்து கூண்டில் அடைந்தார்கள், 2021 ஆண்டில் 99 புலிகள் பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்துள்ளது (தமிழ்நாட்டில் இரண்டு புலிகள்), கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் 93 யானைகள் மின்சாரம் தாக்கியும், 5 யானைகள் இரயிலில் அடிபட்டும் இறந்திருக்கிறது. ஒரு யானை இறந்து போகிறது என்றால் ஒரு காடே அழிகின்றது என்று பொருள் நம் கண் முன்னே விலங்குகள், பறவைகள் போன்றவை தென்படவில்லை என்றால் இந்த உலகம் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்
ஒரு சின்ன யானை குட்டி சிறு தண்ணீர் தொட்டியில் குளிக்க முடியாமல் விளையாடுவதை செய்தி துளியில் பார்த்து மகிழ்கிறோம் காடுகளில் பெரிய ஆறுகளில் குளித்து கொண்டு இருந்த யானை ஏன் சிறு தொட்டியில் சந்தோஷத்தை தேடுகிறது, சிட்டுக்குருவிக்கு வீட்டின் மாடியில் தண்ணீர் வைக்கின்றோம் இதற்கு முன் அவை நீர் அருந்திய நீர்நிலைகள் எங்கே, விவசாய நிலங்களுக்கு உரம் போடுகிறோம் மண்ணையே உரமாக்கிய மண்புழுக்கள் எங்கே? மகரந்தச்சேர்க்கை செய்த வண்டுகள் எங்கே என்ற கேள்வி கேட்டால் மட்டுமே போதாது அதற்கான தீர்வை நோக்கி நகர வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது
என்ன செய்ய வேண்டும்?
இந்த 21ஆம் நூற்றாண்டில் பூமி வெப்பமடைதல், காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, புதிய புதிய வியாதிகள் என பல பிரச்சினைகள் தேங்கி நிற்கிறது ஒட்டுமொத்த காட்டையும் அழித்துவிட்டு ஓரிரண்டு மரகண்றுகளை நடுவதால் புவி வெப்பமடைதலையோ, மழையை அதிகரிக்கவோ முடியாது,புவி வெப்பமடைதலை தடுக்க காடுகள் தேவை காடுகளை சமநிலையில் வைக்க வனவிலங்குகள் தேவை.
எறும்பு, அனில், புலி, யானை, மனிதன் என்று அனைவரும் வாழ்ந்தால் தான் இந்த பூமியை பாதுகாப்பாகவும் வாழத்தகுந்ததாகவும் மாற்ற முடியும்.
– சாகுல் அமிது