Dr தரேஸ் அகமது IAS அவர்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படும் திறமையான அதிகாரி. 2015 ஆம் ஆண்டில் பெண்பிள்ளைகளை பாதுகாத்த சிறந்த ஆட்சியர் எனும் பிரதமரின் விருதைப் பெற்றவர். அதற்காக பெரம்பலூர் மாவட்டமே அன்று வாழ்த்துப் பாடியது.
மாவட்ட ஆட்சியராக இருந்த பொழுது பெண் குழந்தைகளுக்கு என்று பல திட்டங்களை நிறைவேற்றினார். 450 குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தினார். ஒரு தரப்பினரின் குழந்தை திருமணத்தை தடுத்ததற்காக தமிழகம் முழுவதும் அந்த சமூகத்தினர் அவருக்கு எதிராக போராடினர். இருப்பினும் அவரது பணியை தொடர்ந்து செய்தார்.
பள்ளிக்கூடங்கள் மீது தனி கவனம் செலுத்தி, மாணவர்களின் கற்றல் திறணை மேம்படுத்த திட்டங்களை தீட்டினார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை வளர்த்தெடுக்க திட்டமிட்ட தாரேஸ் அகமது, சூப்பர் 30 எனும் திட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மிகசிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு அந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த பயிற்சியில் படித்த மாணவர்கள், தற்போது மருத்துவக்கல்லூரி, அண்ணா பல்கலைகழகங்களில் படித்து வருகிறார்கள்.
இதுமட்டுமல்லாமல், மாவட்டத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் முறையாக நடத்தி, மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைக்கும் வரை கண்காணிக்க ஒரு குழு அமைத்திருந்தார். இந்த சீரிய முயற்சியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பலனடைந்துள்ளார்கள் என புள்ளி விபரங்களை அதிகாரிகள் தெளிவுபடுத்துகிறார்கள்.
மாவட்டத்தில் போடப்பட்ட சத்துணவு பணியாளர்கள் தேர்வில் பணம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என முறையாக தேர்வு நடத்திய மாவட்ட ஆட்சியர்களில் தாரேஸ் அகமதுவும் ஒருவர்.
பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் போராட்டம் அறிவிக்க, கொஞ்சம் பொறுங்க என போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தி, கோயமுத்தூர் பருத்தி ஆராய்ச்சி மையத்திலிருந்து அதிகாரிகளை அழைத்து வந்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் உரிய விலை கிடைக்க வைத்ததார். இதுமட்டுமல்லாமல், விவசாய பிரச்னைகள் என தகவல் வந்தால் அதை தீர்த்தபிறகுதான் அடுத்த வேலை செய்வார். விசுவக்குடி நீர்தேக்க திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலை சம்பந்தப்பட்ட திட்டங்கள் தமிழக அரசிடம் இவர் பெற்றுக்கொடுத்த திட்டங்களே.
‘இது தனிப்பட்ட நபரின் சாதனையல்ல, என்னோட உத்தரவை மதித்து பல அதிகாரிகளின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்’ என்று தனது விருது நிகழ்வில் கூறினார் தாரேஸ் அகமது. அனைவரையும் உள்ளடிக்கியே அவரது செயல்பாடுகள் அமைந்திருந்தன.
இப்படி பல்வேறு சாதனைகளை Dr.தரேஸ் அகமது IAS அவர்கள் மருத்துவராக இருந்து IAS தேர்ச்சிபெற்றவர். மேலும் Health Policy Planning and Financing இல் மாஸ்டர் பட்டத்தை London School of Economics & London School of Hygiene & Tropical Medicine என்ற கல்லூரியில் பெற்றவர். அப்படிப்பட்டவர்தான் தற்போது கொரோனா கட்டளை மையத்திற்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கலாம்.
- சபீர் அகமது.