மும்பையில் உள்ள இளம் தொழிலதிபரான ஷானவாஸ் ஷேக் எனப்படும் நபர் மும்பையில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனக்கு மிகவும் விருப்பமான எஸ்.யூ.வி காரை விற்று இலவசமாக ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கி பல உயிர்களை காப்பாற்றி வருகிறார்.
யுனிட்டி அன்ட் டிக்னிடி பவுன்டேசன் (ஒற்றுமை மற்றும் கண்ணியம் பவுன்டேசன்) என்ற என்.ஜி.வோவை ஆரம்பித்த இவர் கடந்த 2020 ம் ஆண்டிலிருந்தே தன் சேவையை தொடங்கிவிட்டார்.
ஆரம்பத்தில் இவர் லாக்டவுன் காலத்தில் பாதிக்கப்பட்ட மும்பையின் சேரி பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல், அந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்துதல், இடம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் தாய்நிலம் செல்ல உதவி செய்வதல் போன்ற பணிகளை செய்து கொண்டிருந்தார்.
தன்னுடைய போர்ட் என்டோவர் காரை ஆம்புலன்ஸாக மாற்றியும் மக்களுக்கு பயன்தரும் வகையில் உதவிவந்தார்.
பின்பு ஒருநாள் அவரின் நண்பரும் அவருடைய தொழில் கூட்டாளருமான அப்பாஸ் ரிஸ்வி என்பவரின் சகோதரி கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
மேலும் ஆறு மாத கர்ப்பிணியான இவருக்கு ஒருநாள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் அனுமதிக்க எண்ணிய அவரின் கணவர்
ஒரு ஆட்டோவில் அவருடன் மருத்துவமனைக்கு புறப்பட்டார்.
அவர்கள் சென்ற முதல் மருத்துவமனையில் இங்கு தேவையான படுக்கை வசதி இல்லை என்று கூறி அனுப்பிவிட்டனர். அடுத்த மருத்துவமனையில் தேவையான வென்டுலேட்டர்கள் கையிருபில் இல்லை என்று கூறி அனுப்பி விட்டனர். மூன்றாவதாக அவர்கள் சென்ற மருத்துவமனையில் தேவையான அளவு ஆக்சிஜன் கையிருப்பில் இல்லை என்று கூறியனுப்பியுள்ளனர். மூன்றாவது மருத்துவமனையில் இருந்து அடுத்த மருத்துவமனை செல்லும் சில நிமிடங்களில் அந்த ஆட்டோவிலேயே அந்த பெண் மரணித்து விட்டார்.
இந்த சம்பவம் ஷானவாஷ் அவருடைய மனதில் ஒரு வகையான நெருடலை ஏற்படுத்தியது.
இதன் பிறகு இனி ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும் என உறுதியேற்று தன்னால் இயன்ற அளவு இதுபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நேரத்தில் ஆக்சிஜன் அளித்து மக்களின் உயிர்களை காப்பாற்ற தொடங்கினார்.
ஆனால் அப்போது அவரிடம் அதிகமான அளவு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்க தேவையான அளவு பணம் இல்லை.
எனவே அவர் தனக்கு மிகவும் பிரியமான தன் எஸ்.யூ.வி காரான மாற்றியமைக்கப்பட்ட போர்ட் என்டோவரை விற்று 3 ஜம்போ சிலிண்டரையும் 20 சிறிய வகை சிலிண்டர்களையும் வாங்கி தற்போது வரை தேவைபடும் மக்களுக்கு கொடுத்து உதவி வருகிறார். தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இவர் காப்பாற்றியும் உள்ளார்.
மேலும் பல மக்களை காப்பாற்றி கொண்டும் வருகிறார்.
சுழற்சி முறையில் அந்த சிலிண்டர்களில் ஆக்சிஜனையும் தனே தன் என்.ஜி.ஓவின் மூலம் நிரப்பி கொடுப்பதுடன். சுழற்சி முறையில் பல தரப்பட்ட ஏழை மக்களின் உயிர்காத்து காத்து உதவி வருகிறார்.
பொதுவாக இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள், மதவாதிகள் என்று இட்டுக்கட்டி பரப்பப்பட்ட இஸ்லாமியவெறுப்பு தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் இந்நிலையில் சகோதரர் ஷாநவாஸ் ஷேக் இன் இத்தகைய நற்செயல் இஸ்லாமியர்களின் மிது போலியான பொய்களை இட்டுக்கட்டி இஸ்லாமியவெறுப்பை பரப்புபவர்களை செருப்பால் அடித்தது போல் உள்ளது.
- ஹபிபுர் ரஹ்மான்