உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என நாம் பாடத்தில் படித்திருக்கிறோம். அதை மோடியின் ஆட்சி தரைமட்டம் ஆக்கிக்கொண்டிருக்கிறது. உலகத்திலேயே, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்திற்கு ஆதரவாக ‘Pro CAA protest’ என்கிற பெயரில் ஒரு அயோக்கிய கூட்டம் போராடுகிறது என்றால் அது பாஜகவின் சங்கிக் கூட்டம்தான். இத்தனை நாட்கள் அமைதியாக போராடிய Anti CAA போராட்டக்காரர்களை அடித்து நொறுக்கவும் இஸ்லாமியர்களின் உடைமைகளை திருட்டு நாய்களைப் போல திருடிச்செல்லவும் மத்திய அரசின் ஆசீர்வாதத்தோடு இறங்கியுள்ளது இந்த வன்முறைக் கூட்டம். கேஜ்ரிவால் என்கிற டெல்லி எடப்பாடி, “போலீஸ் தன் கண்ட்ரோலில் இல்லை” என சொல்லிவிட்டு அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. சரி, போலீஸ்தான் அவரது கண்ட்ரோலில் இல்லை, குறைந்தபட்சம் அடிபட்டவர்களைப் பார்த்து ஆறுதல் கூடச் சொல்லவில்லை இந்த சாஃப்ட் சங்கி.
இந்திய சமூக அமைப்பு, சாதி அமைப்பு, மத அமைப்பு, சாதிய ஒடுக்குமுறை, பார்ப்பனீயம், மத துவேஷம் போன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் அறிவில்லாமல், வெறும் ஊழல் ஒழிப்பு, முன்னேற்றம் என வாக்குறுதி தந்து அரசியலுக்கு வருகிறவன் அத்தனை பேரும் அப்பட்டமான அயோக்கியனாகத்தான் இருப்பான் என்பதற்கு கேஜ்ரிவால் மிகச்சிறந்த உதாரணம்.
இன்னொரு பக்கம், உலகின் மிகப்பெரிய ஜோக்கர்கள் இரண்டு பேர் சேர்ந்து இவ்வளவு கலவரங்களுக்கிடையே கூச்சமே இல்லாமல் கூத்தடிக்கிறார்கள். நிற்க.
“இவரு பெரிய அமெரிக்காகாரன்.”
‘ஆமா இது பெரிய அமெரிக்கா”
“என்னடா ஏதோ அமெரிக்காலயே பொறந்த மாதிரி சீன் போடுற” என்றெல்லாம் நாம் சாதாரணமாகப் பேசுவோம். அமெரிக்கா என்றால் ஏதோ பெரிய இது என்கிற பொதுப்புத்தி நமக்கெல்லாம் உண்டு. எதை ஒப்பிடவேண்டும் என்றால் அமெரிக்காவோடுதான் நாம் ஒப்பிடுவோம். ஏனெனில் அதன் மீதான நம் மரியாதையும் பிரம்மிப்பும் அப்படி! அதையெல்லாம் தகர்த்து எறிவதற்காகவே பிறவி எடுத்திருக்கிறது ட்ரம்ப் எனும் மானிட அற்பப் பதர்! வட இந்திய யூரின் டிரிங்கர்ஸ் மோடியைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அதில் ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால் அமெரிக்கர்கள் ட்ரம்பைத் தேர்ந்தெடுத்திருப்பது நிஜமாகவே ஆச்சரியமாக இருக்கிறது.
நம்மூர் ‘பிரதம சல்லிதான்’ கைத்தட்டு வாங்குவதற்காக தப்புத்தப்பாக இங்கிலிஷ் பேசி அடிக்கடி அசிங்கப்படும் என்றால் அதற்கு சற்றும் சளைக்காத அமெரிக்க சல்லிதான் டிரம்ப். சச்சின், கோலி முதல் விவேகானந்தர் வரை யார் யார் பேரையோ தப்பும்தவறுமாகச் சொல்லி குழுமியிருந்த பாஜக யூரின் டிரிங்கர்ஸின் கைத்தட்டுகளை வாங்குகிறார். நம் ‘பிரதம சல்லி’யோ இன்னொரு பக்கம் “ஐ பிரஜண்ட் டோலான் ட்ரம்ப்” என அற்புதமாகப் பேசி பட்டையைக் கிளப்புகிறார். நாமோ காதிலும் கண்ணிலும் ரத்தம் வடிய இதையெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது.
ஓபாமாவோ, கிளிண்டனோ இப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தால் நிச்சயம் மோடி அரசின் இந்த சைக்கோத்தனங்களுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்திருப்பார்கள். தங்கள் கண்களில் இருந்து குடிசைகளை மறைப்பதற்காக மோடியால் கட்டப்பட்ட “தீண்டாமைச் சுவர்களின்” மீதான தங்கள் அருவெறுப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். ஆனால் மோடியின் நல்லநேரம் அவரைப் போலவே ஒரு நார்சிச நாசகார நாலாந்தர ஜனாதிபதி அமெரிக்காவுக்கு வாய்த்திருக்கிறார்.
God save America என அமெரிக்கப் படங்களில் அடிக்கடி சொல்வார்கள். ஆனால் ட்ரம்பையும், மோடியையும் சேரத்துப் பார்க்கும்போது God save America and India என Godஐ அழைத்தால் God நம்மை செருப்பாலயே அடிப்பார்.
ஏனெனில் இது இரண்டுமே ஹிட்லரைப் போலவே தேர்தல் களத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘Elected Evils’. பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்ட அழகான ஒரு மாளிகையின் சாவியை குரங்குகளின் கைகளில் கொடுத்த பாவம் முழுதும் இருநாட்டு மக்களையே சாரும்.
நாம் என்ன செய்யலாம்? எழுதிக்கொண்டே இருக்கலாம். போராடிக்கொண்டே இருக்கலாம். வாக்குரிமை இருக்கும் மூளை மழுங்கிய மக்களிடம், “டேய் முழிங்கடா .. முழிச்சுப் பாருங்கடா… மதத்துக்கும், மாட்டு மூத்திரத்துக்கும், நாட்டோட வளர்ச்சிக்கும் சம்பந்தமில்லடா” என விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கலாம். சுருக்கமாகச் சொல்லப்போனால் “People save the world” என மக்களிடம் வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
-டான் அசோக்,எழுத்தாளர்