எழுதியவர் : ஞானபாரதி சின்னசாமி, சமூக ஊடகவியலாளர்
திப்புசுல்தானிடம் பறக்கும் குதிரைகள் இருப்பதாக ஆங்கிலேயர்கள் நம்பினார்கள்.
ஏனெனில் ஆம்பூரை தாக்கப் போவதாகக் கூறி விட்டு கேரளத்தில் உள்ளக் கொடுங்களூரை அதே தினத்தில் தாக்கும் ஆற்றல் பெற்றவர்.
குதிரைப்படை நடத்துவதில் ரஷ்ய நாட்டின் கசாக்கியர்களைப் போலவும் பிரான்ஸ் நாட்டின் சக்ரவர்த்தி நெப்போலியன் போனோபார்ட்டைப் போலவும் திறமை படைத்து இருந்தார்.
ஸ்ரீரங்கப்பட்டினம் ஒரு தீவு.
ஹைதர்அலி மைசூர் மகாராஜாவின் படையில் 20 குதிரைவீரர்களின் குழுவின் தலைவராக பணியாற்றியவர் என்பதால் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் மைசூர் மகாராஜாவின் அரண்மனையை விட உயரமாக அரண்மனையைக் கட்டி விடக் கூடாது என்பதில் ஹைதர்அலி கவனமாக இருந்தார்.அதனால் ஹைதர் அலியின் அரண்மனையான ரங்க்மஹால் மைசூர் அரண்மனையை விட சிறியதாக நிர்மாணிக்கப்பட்டது.((ஹைதர்அலி விரும்பி இருந்தால் மைசூர் அரண்மனையில் இருந்து மைசூர் மன்னர்களை வெளியே துரத்தி விட்டு அவரே மைசூர் அரண்மனையைத் தன் வாசஸ்தலமாக ஆக்கி இருக்கலாம்)
போர்க்களத்தில் யுத்தம் செய்து கொண்டு இருந்த போது வீரமரணம் அடைந்த ஒரே தென்னிந்திய சக்ரவர்த்தி திப்பு சுல்தான் மட்டுமே.
(மற்ற மன்னர்கள் அவர்களுடைய படை யுத்தம் செய்து கொண்டு இருக்கும் போது அந்தப்புரத்தில் முயங்கி விடுவார்கள்.)
திப்பு யுத்தக்களத்தில் மரணம் எய்தி விட்டார் என்பதை ஆங்கிலேயர்களால் நம்ப முடியவில்லை.
ஒரு லாந்தர் விளக்கை வைத்துக் கொண்டு இரவு படுகளத்தில் உயிரற்றுக் கிடந்த திப்புவின் உடலைக் கண்டெடுத்த போது மார்க்ஸ் சொன்னதைப் போல “இந்தியா முழுமையையும் அந்த ஒரு மாவீரனின் மரணத்தோடு அடிமை செய்து விட்டோம்” என்ற பெருமிதம் அவர்கள் கண்களில் மிளிர்ந்தது.(திப்புவின் உடலைக் கண்டுபிடிக்கும் நிகழ்வை ஒரு ஓவியர் உலகப்புகழ் பெற்ற ஓவியமாகத் தீட்டியுள்ளார்.)(அந்த ஓவியம் தரியா தௌலத் என்று அழைக்கப்படும் வசந்த மாளிகையில் இப்போதும் இருக்கிறது)
ஆங்கிலேயர்களை தன்னுடைய பரம விரோதியாக நினைத்த அந்த ஏகாதிபத்ய எதிர்ப்பாளன் தான் “தன்னுடைய ஆதர்ஷ புருஷன் ” என்று நேதாஜி பின்னாளில் சொன்னார்.
திப்புசுல்தானை நினைவூட்டும் அரண்மனை இருக்கும் வரை இன்னும் பல மாவீரர்களை அது உருவாக்கும் சக்தியாக அமைந்து விடும் என்பதால் திப்புவின் அரண்மனையை இருந்த இடம் தெரியாமல் ஆங்கிலேயர்கள் இடித்து அகற்றி விட்டார்கள்.
விருப்பாச்சி கோபால் நாயக்கர் ,மருது சகோதரர்கள்,ஊமைத்துரை, கட்டபொம்மன்ஆகியோருடன் அவர் நல்லுறவில் இருந்தார்.தீரன் சின்னமலை மற்றும் துந்தாஜிவா அவருடைய ராணுவத்தில் பணியாற்றியவர்கள்.
அவரை மைசூர் போரில் தோற்கடித்தது சர் ஆர்தர் வெல்ஸிலி.திப்புவை தோற்கடித்ததற்காக அவருக்கு DUKE பட்டம் வழங்கப்பட்டு டுயூக் வெலிங்டன் என்றுஅழைக்கப்பட்டார்.அவர் தான் நெப்போலியனை தோற்கடித்தவர்.
திப்பு நெப்போலியன் போனோபார்ட்டின் நெருங்கிய நண்பர்.யுத்தத்தின் போது நெப்போலியன் உதவிக்கு அனுப்புவதாக வாக்களித்தபடி பீரங்கிப் படையை நெப்போலியனால் அனுப்ப முடியாமற் போனதும் மீர்சாதிக் என்ற துரோகி ராணுவ ரகசியங்களை எதிரிக்கு சொல்லி விட்டதாலுமே திப்பு தோற்றார்.(பிரான்சில் இருந்து பீரங்கிகள் வராததால் திப்பு தோற்றார்.பிரான்சில் இருந்து ரபேல் விமானங்களை வாங்கியதால் தான் மோடி சிக்கிக் கொண்டார் என்பது முரண்நகை)
கேரளத்தில் பெண்கள் மேலாடையின்றி மார்பைக் காட்டிக் கொண்டு திரிவதைப் பார்த்து அதிர்ந்து போனார்,அதைத் தடை செய்து சட்டம் போட்டார். அந்த சட்டம் நெப்போலியனால் எழுதப்பட்டது.
இந்துப் பெண்களின் மானம் காத்த திப்புவின் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது என்று பெண்களை மேலாடையின்றி அலைய விட்ட பிராமணர்களின் கட்சி எதிர்ப்பதில் அர்த்தம் இருக்கிறது.
ஏகாதிபத்யத்தை எதிர்த்த போரில் தன் இன்னுயிர் ஈந்த திப்புவை ஆங்கிலேயர்களின் அடிவருடிகளாக பாதசேவை செய்தவர்கள் எதிர்ப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது.!!!