Commercial படங்கள் முன்வைக்கும் ‘சமூக’ பார்வை பல நேரங்களில் அபத்தமானவை.
தமிழர் பண்பாடு, சல்லிக்கட்டு, விவசாயம், போராட்டம் போன்றவைகளை மசாலாவாக பயன்படுத்துகின்றன இத்தகைய சினிமாக்கள். அவர்களைப் பொறுத்தவரையில் ஐடம் டேன்சும் இந்த டயலாக்குகளும் ஒன்றுதான். வசூலுக்கு உதவுபவை.
இயக்குனர்களும், வசனகர்த்தாக்களும் அவர்களின் படம் முன் வைக்கும் சிக்கல்களை விழிப்புடன் அனுகுவதில்லை என்பது குற்றச்சாட்டு.
உதாரணத்திற்கு, கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஒரு டயலாக்.
“சாதி ஒழியனும்னு ஒழியனும்னு கத்துறவனும் சாதிய வளர்த்துடுறான்” என நீள்கிறது. ஒடுக்கப்பட்டவனின் அணிதிரட்டலை குற்றமாக சித்தரிக்கும் வசனம். சில வருடங்களுக்கு முன் காமெடி படங்கள் வசூலைக் குவித்ததால், அந்த ஜானர் படங்கள் வரிசை கட்டி நின்றன. அதுபோலவே இன்றைய Trendஐ AR முருகதாஸ் முதல் விஜய் டிவி வரை பயன்படுத்தி நம்மை சோதிக்கிறார்கள். பிக்பாஸில் கமலின் ‘சமூகக்கருத்துக்களை’ சகிக்க முடியல. ‘Striking is a bad attitude’ என்கிறார், பண்பாடு-ஆடை-உறவு என அவர் கக்கும் வாந்திகள் ஏராளம்.
Commercial படங்கள் ‘சமூக சிக்கல்களை’ எளிமைப்படுத்தி, சிக்கலுக்கு காரணமானவர்களை தவறாக அடையாளம் காட்டிவிடுகின்றன. அதன்மூலம் குற்றவாளிகளை தப்பிக்க வைக்கின்றன.
இவர்கள் பணம் செய்துவிட்டுப் போவதில் எனக்கு எந்த கருத்தும் இல்லை. ஆனால், சமூகத்தைப் பற்றிய மொன்னைப் புரிதல்களுடன் நம்மை ஆளவும் ‘சினிமாக்காரர்கள்’ வரிசையில் நிற்கிறார்களே!
இத்தகைய படங்களைப் பற்றி ஒன்றுதான் சொல்ல வேண்டும்,
Nothing is better than non-sense!
– Nishar.